தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதனின் பொம்மை என்ற நாவல் எழுதிய உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருக்கார்த்தியல் என்ற சிறுகதைக்காக எழுத்தாளர் ராம்தங்கத்திற்கு யுவ புரஸ்கர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.


விருது அறிவிப்பு


இந்திய மொழிகளில் வெளியாகி உள்ள சிறந்த இலக்கியப் படைப்புகளை பெருமைப்படுத்தும் விதமாக 1954ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருது மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சிறந்து விளங்கிய சிறுகதை, கவிதை, கட்டுரைக்கான இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்மொழிக்கான சாகித்ய அகாடமியின் விருது எழுத்தாளர் மு.ராஜேந்திரன் எழுதிய ’காலா பாணி' நாவலுக்கு வழங்கப்பட்டது. 


இந்நிலையில், இந்த ஆண்டு ’ஆதனின் பொம்மை' என்ற நாவலை எழுதிய எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ’திருக்கார்த்தியல்' என்ற சிறுகதைக்காக எழுத்தாளர் ராம்தங்கத்திற்கு யுவ புரஸ்கர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.


எழுத்தாளர் உதயசங்கர் யார்?


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1960ஆம் ஆண்டு பிறந்தவர் உதயசங்கர். சிறார் இலக்கியம் சார்ந்து இயங்கி வருபவர்களில் ஒருவர் உதயசங்கர். இவர் குழந்தைகளுக்கான கதை, நாவல், பாடல்களை எழுதி வருகிறார். இவர் 1978 முதல் எழுதி வருகிறார்.


இது வரை 8 சிறுகதைத் தொகுப்புகள், 7 கட்டுரைத் தொகுப்புகள்,  மலையாளத்திலிருந்து 7, ஆங்கிலத்திலிருந்து  3 மொழிபெயர்ப்பு நூல்கள், கவிதைத் தொகுப்புகள் 5, ஒரு குறு நாவல் தொகுப்பு ஆகியன வெளிவந்துள்ளன.  இவர் மாயாவின் பொம்மை, புலிக்குகை மர்மம், பொம்மைகளின் நகரம் உள்ளிட்ட குழந்தை இலக்கியங்களை எழுந்தியுள்ளார். இந்நிலையில், இவர் எழுதிய ’ஆதனின் மொம்மை' என்ற நாவலுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.   


'ஆதனின் பொம்பை நாவல்’


2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று நிகழ்வுகள் எப்படி இருந்திருக்கும்? நம்முடைய முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? அக்கால கட்டத்தில் மக்கள் எப்படிபட்டவர்களாக இருந்திருப்பார்கள்? என பல கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் எழுத்தாளர் உதயசங்கர் 'ஆதனின் பொம்மை' நாவலை எழுதியுள்ளார். இந்த நாவல் கீழடி அகழாய்வின் மூலமாக 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்வியல்களை அறிந்து கொள்ள வகையில் எழுதப்பட்டிருக்கும்.


ராம் தங்கம் யார்?


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ராம் தங்கம்.  2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவரது முதல் புத்தகமான 'காந்திராமன்' என்றது வெளிவந்தது. இதுபோன்று, ஊர்சுற்றிப் பறவை, மீனவ வீரனுக்கு கோவில் என்று அடுத்தடுத்து புத்தகங்கள் வெளிவந்தன. இதனை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு இவரது 'திருக்கார்த்தியல்' என்கிற முதல் சிறுகதை வெளிவந்தது. இந்த சிறுகதை அனைவரின் கவனத்தை பரவலாக பெற்றது. இந்த சிறுகதைக்கு ஞானியின் கோலம் அறக்கட்டளையின் ‘அசோகமித்திரன்' விருது கிடைத்தது.


அதேபோன்று 2019ஆம் ஆண்டு சுஜாதா விருது, வடசென்னை தமிழ் இலக்கிய விருது, சௌமா இலக்கிய விருது, படைப்பு இலக்கிய விருது என பல்வேறு விருதுகளை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது சகாத்ய அகாடமியின் யுவ புரஸ்கர் விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.