கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் உலகப்புகழ் பெற்ற ஆலயம் ஆகும். ஆண்டுதோறும் சபரிமலைக்கு மாலையிட்டு ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். தமிழ்நாட்டில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம்.


பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுவதும் வழக்கம். இந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, நாளை முதல் அடுத்தாண்டு ஜனவரி 20-ந் தேதி வரை சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.




சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக இந்த சிறப்பு பேருந்துகள் சென்னை, திருச்சி, மதுரை, கடலூரில் இருந்து பம்பைக்கு நேரடியாக இயக்கப்பட உள்ளது. புறப்படும் பகுதிகளுக்கு ஏற்ப பம்பைக்கு செல்லும் கட்டணம் மாறுபடும். தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சபரிமலை மகர ஜோதியை காணவும், மண்டல பூஜையை காணவும் லட்சக்கணக்கான பக்தர்கள் பம்பையில் குவிவது ஆண்டுதோறும் வழக்கமான நிகழ்வுகளில் ஒன்றாகும்.  


சபரிமலை ஐயப்பன்கோவிலில் நடப்பாண்டிற்கான மண்டல பூஜைக்கான நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.  சபரிமலை ஐயப்பன்ன கோவிலில் இன்று முதல் தொடர்ந்து 41 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற உள்ளது. வரும் டிசம்பர் மாதம் 27-ந் தேதி மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது. பின்னர், கோவில் நடை மூடப்படும்.


பின்னர், மகர விளக்கு பூஜைக்காக வரும் 30-ந் தேதி மீண்டும் நடை திறக்கபப்டும். மகரவிளக்கு பூஜைக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் சபரிமலையின் அதிகாரப்பூர்வ இணையதளமான sabarimalaonline.org எனும் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.  சபரிமலையில் தரிசனம் செய்ய குழந்தைகளுக்கு முன்பதிவு செய்யத் தேவையில்லை. முன்பதிவு செய்யாத ஐயப்ப பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் எனப்படும் சபரிமலை செல்லும் பாதைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 இடங்களில் பதிவு செய்து கொள்ளும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு பதிவு செய்த பிறகு, ஐயப்ப தரிசனம் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.  


மேலும் படிக்க : TN Rain Alert: தமிழகமே தயாரா? மீண்டும் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வெளுத்து வாங்கப்போகும் மழை..


மேலும் படிக்க : முந்துங்கள்...! ஓசூரில் அமைகிறது இந்தியாவின் மிகப்பெரிய ஐ-போன் உற்பத்தி ஆலை.. 60,000 பேருக்கு வேலை வாய்ப்பு