ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


 




கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கொடையூர் ஊராட்சி, வேலாம்பாடி ஊராட்சி மற்றும் சேந்தமங்கலம் கிழக்கு ஊராட்சி ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபுசங்கர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கொடையூர் ஊராட்சி, உட்பட்ட ஐந்து ரோடு கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.85 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற சிமெண்ட் சாலை பணிகளையும், அதே பகுதியில் பாரத பிரதமர் மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசு நிதி உதவியுடன் ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டின் பணிகளையும், கே வெங்கடாபுரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.12 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை நடைபெற்று வரும் பணிகளையும், அதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.1.99 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மண்வரப்பு அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு நாட்கள் முறையாக வேலை வழங்கப்படுவது குறித்தும், பணிபுரியும் பணியாளர்களுக்கு தயார் நிலையில் உள்ள முதலுதவி சிகிச்சை பெட்டி இருக்குகின்றதா ஆய்வு மேற்கொண்டும்,




 


சின்னம்மம்பட்டி பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6.38 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களுக்கான தானியக் கலங்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், வேலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட சௌந்திரபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.3.22 லட்சம் மதிப்பீட்டில் புணரமைக்கும் பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.57 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களுக்கு கட்டப்பட்டு வரும் கழிப்பறை கட்டிட பணிகளையும், அதே பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.80 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளி மாணவியர்களுக்கான கட்டப்பட்டு வரும் கழிப்பறை கட்டிட பணிகளையும்,, பொது நிதியிலுருந்து ரூ.4.96 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சமையலறை கட்டிடம் கட்டும் பணிகளையும், தொடர்ந்து சேந்தமங்கலம் கிழக்கு ஊராட்சி பகுதியில் செல்லிவலசு கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.46 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்றக்குழாய் பாலம் பணிகளையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர்  அறிவுறுத்தினார்.




இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை திருமதி. வாணி ஈஸ்வரி, செயற்பொறியாளர்  பாலகிருஷ்ணன், அரவக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, பாலசந்தர், கொடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.