ஊரக வளர்ச்சித்துறைக்கு சொந்தமான வங்கிக்கணக்குகளில் இருந்து சுமார் ரூ.22 கோடி ரூபாய் திருடப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரூ.22 கோடி கொள்ளை - 7 பேர் கைது
தமிழகத்தின் பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களுக்கான வங்கிக்கணக்குகளில் இருந்து பணம் நூதனமுறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊராட்சி ஒன்றியங்களுக்கான வங்கிக்கணக்குகள், அப்பகுதிகளுக்கான வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்தவும் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து நிதிகளை பெறவும் பயன்படுகின்றன. இந்நிலையில் அரசின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22 கோடி ரூபாய் திருடப்பட்டிருப்பது சமீபத்தில் அம்பலாமானது.
கடந்த மாதத்தில் 46 பரிவர்த்தனைகள் மூலம் ரூ.22.30 கோடியை பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு நூதனமுறையில் கும்பல் ஒன்று மாற்றியது கண்டறியப்பட்டது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் லோகநாதன், அண்ணாதுரை, செல்ல பாண்டியன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அரசின் வங்கிக்கணக்கில் உள்ள பணமே நூதன முறையில் கொள்ளையடிக்கப்படும் நிலையில், தனிநபர்களின் வங்கி இருப்புகளுக்கு என்ன பாதுகாப்பு என்ற கேள்வி பொதுமக்களிடையே மேலோங்கியுள்ளது. இதன் காரணமாக வங்கிக்கணக்குகள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு பன்மடங்கு பாதுகாப்புகளை ஏற்படுத்துவதும் இன்றியமையாததாகிறது.மேலும் தனிநபர்கள் தங்களுக்கு வங்கிக்கணக்கு விவரங்கள், கடவுச்சொற்கள் மற்றும் OTP ஆகியவற்றையும் எவரிடமும் பகிராமல் பாதுகாப்பது அவசியம்.
