Continues below advertisement

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து முதலமைச்சர் விஜய் ஏன் மெளனமாக இருக்கிறார் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

செங்குன்றத்தில் திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.பாரதி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

Continues below advertisement

முதல்வர் மெளனம் ஏன்?

அப்போது அவர் கூறுகையில், “பாலியல் வன்கொடுமைகள் குறித்து முதல்வர் வாய்மூடி மௌனமாக இருக்கிறார். மக்கள் அவரை நம்பி வாக்களித்தார்கள், ஒரு மாதத்திற்குள் சாயம் வெளுத்து விட்டது. இதுவரை தமிழகம் காணாத அளவுக்கு வன்முறையும் பாலியல் குற்றங்களும் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு ஸ்டாலின் கூறியது போல மிக விரைவில் அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக தள்ளப்பட்டுள்ளது. 6 மாத காலத்திற்குள் இந்த ஆட்சியை பற்றி எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டோம் என கூறினோம். ஆனால் நடப்பதைப் பார்த்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சாதனை செய்வதற்கு 6 மாதம் நேரம் கொடுத்தோம். ஆனால் வேதனைகளைப் பற்றி பேசாமல் இருக்க மாட்டேன் என கூறவில்லை.

 

அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா கேவலம்

நாள்தோறும் ஒரு வேதனை. 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதற்கு முதல்வர் இதுவரை ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. முதல்வர் சைலன்டாக உள்ளார். தமிழகத்தில் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும் என எதிர்பார்ப்போடு அமைக்கப்பட்ட ஆட்சி நேர்மாறாக நடக்கும் என்பதால் புரட்சிதான் வெடிக்கும் என்பது வரலாறு. 

Also Read| TN Debt Per Capita: தனி நபர் மீது எவ்வளவு கடன் இருக்கு? தமிழ்நாட்டின் உண்மையான கடன் எவ்வளவு? - வெள்ளை அறிக்கையில் பரபரப்பு தகவல்

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது, தமிழகத்தில் இதுவரை இப்படி ஒரு கேவலம் நடந்ததே கிடையாது. ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் கட்சியை விட்டு மாறுகிறார்கள். ஆனால் திமுக இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. 75 கால இயக்கம் பல புரட்சிகளை தமிழகத்தில் செய்திருக்கிறது. இதற்கு ஒரு முடிவு கட்டும். தவெக வெள்ளை அறிக்கை குறித்து படித்து பார்த்து சொல்கிறேன்” என்று கூறினார்.