Vijay Dhamu: திமுக எதிர்க்கட்சியாக சிறப்பா செயல்படுறாங்க.. தவெக எம்.எல்.ஏ. விஜய் தாமு பாராட்டு!
நான் ஜெயித்த பிறகு மக்களுக்கு நன்றி தெரிவிக்க சென்றேன். அந்த வெற்றியை மக்கள் தங்களுடையதாகவே பார்த்தார்கள். நம்ம ஜெயிச்சிட்டோம் என மகிழ்ச்சியாக கூறினார்கள் என விஜய் தாமு தெரிவித்துள்ளார்.

ராயபுரம் தொகுதியில் நான் பெற்ற வெற்றியை மக்கள் தங்கள் வெற்றியாக பார்க்கிறார்கள் என தவெக எம்.எல்.ஏ., விஜய் தாமு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் ராயபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டர் விஜய் ராமு தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுபேர் கானை விட சுமார் 14,249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் அவர் தேர்தலின்போது தன்னை ஆட்டோ ஓட்டுநர் என முன்னிறுத்தி வாக்கு கேட்டார். அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ஆட்டோ சொந்தமாக இல்லை எனவும், கார் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுதொடர்பாக அவர் நேர்காணல் ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.
அந்த நேர்காணலில் பேசிய தவெக எம்.எல்.ஏ., விஜய் தாமு, “நான் ஜெயித்த பிறகு மக்களுக்கு நன்றி தெரிவிக்க சென்றேன். அந்த வெற்றியை மக்கள் தங்களுடையதாகவே பார்த்தார்கள். நம்ம ஜெயிச்சிட்டோம் என மகிழ்ச்சியாக கூறினார்கள். எனக்கு அதைப் பார்த்ததும் மிகவும் சந்தோசமாக இருந்தது. நாம் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றதை விட எங்க அண்ணன் விஜய் முதலமைச்சராக பதவியேற்றதைக் கண்டு கண் கலங்கி விட்டேன்.
ஆட்சிக்கு வந்த இரண்டு வாரங்கள் தான் ஆகிறது. எங்கள் மீது மிகப்பெரிய அளவில் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் எங்கள் தலைவர் விஜய் சொன்னதெல்லாம் ஒன்று தான். இன்றைக்கு எங்களை அடிப்பதற்கு பயன்படுத்தும் அந்த மூளையை, கடந்த 5 வருடத்திற்கு மக்களுக்காக யோசித்து பயன்படுத்தியிருந்தால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்திருக்கும். அவர்கள் ஆளும் கட்சியாக இருப்பதை விட எதிர்க்கட்சியாக நன்றாக செயல்படுகிறார்கள். அதுவும் ஆரோக்கியமான ஒன்று தான். அப்போது தான் நமக்கும் சுவாரஸ்யமாக இருக்கும்:” என கூறினார்.
ஆட்டோ டிரைவர் தான்.. ஆனால்..
மேலும், “நான் ஆட்டோ டிரைவர் என பொய் சொல்லி ஜெயித்து விட்டதாக சொன்னார்கள். விஜய் மக்கள் இயக்கமாக இருந்தவரை நான் ஆட்டோ ஓட்டினேன். இன்றைக்கும் அந்த ஆட்டோ என் மனைவி பெயரில் உள்ளது. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெரியார் நகர். என் ஏரியாவில் தான் ஆட்டோ ஷங்கர் இருந்தார். நான் ஆட்டோ ஓட்ட வந்த காலத்தில் போலீஸிடம் பிடிபடும்போது வீட்டு முகவரி சொன்னார் வேறு விதமாக நடத்துவார்கள்.
Also Read: உண்மையான B டீமை இறக்கும் பாஜக..! அண்ணாமலையின் புதிய கட்சி - ஆப்ரேஷன் “கிறிஸ்துவ மிஷினரி”
இன்றைக்கு வடசென்னையை எப்படி எதிர்மறையாக சொல்கிறார்களோ அன்றைக்கு பெரியார் நகரை கூறினார்கள். அப்படியான ஒரு ஏரியாவில் இருந்து வந்து ஆட்டோ ஓட்டி சரியான தலைவரை தேர்ந்தெடுத்து இன்றைக்கு எம்.எல்.ஏ.வாகி இருக்கிறேன். ஆட்டோ ஓட்டுநர் எல்லாரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம். அதற்கு ஒரே உதாரணமாக நான் இருக்கிறேன். என்னை மாதிரி மற்ற ஆட்டோ ஓட்டுநர்களும் முன்னேற வேண்டும் என்பது தான் என் எண்ணமாக உள்ளது. அதனால் தான் தேர்தலின்போது ஆட்டோ ஓட்டுநர் என்ற அடையாளத்தை முன்வைத்தேன். நான் வைத்திருக்கும் கார் என் நண்பர் லோன் போட்டு வாங்கி கொடுத்தது. இன்னும் கடனை கட்டிக்கொண்டிருக்கிறேன். அவர் பெயரில் வாங்கினால் நாளை தவறாக பேசுவார்கள் என்பதால் கடன் வாங்கி என் பெயரில் கார் வாங்கினேன்” என விஜய் தாமு தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















