மேலும் அறிய

அடக்குமுறை மூலம் பணியவைப்பதா? ஊராட்சி செயலாளர்களுக்கு உடனே ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

ஊராட்சி செயலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை: ராமதாஸ் கண்டனம்! ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல் | அரசு என்ன செய்யப்போகிறது?

ஊராட்சி செயலாளர்களை அடக்கு முறைகள் மூலம் பணியவைக்க முற்படாமல், பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு தகுதிக்கேற்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க அரசு முன்வர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

’’தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளில் 12,500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டு 2018-ம் ஆண்டு முதல் ரூ.15,900 – ரூ.50,400 அடிப்படை ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்கள் ஓய்வுபெற்ற பிறகு ரூ.2,000 மட்டுமே மாத ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. 

காத்திருப்புப் போராட்டம்

இந்த நிலையை மாற்றி தங்களின் ஊதிய விகிதத்திற்கு ஏற்ற வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து அரசாணை வெளியிடவேண்டும் என்பதை வலியிறுத்தி கடந்த ஜனவரி 6-ம் தேதி முதல் 13-ம் தேதிவரை தொடர் விடுப்பு எடுத்து, சென்னையில் காத்திருப்புப் போராட்டமும் நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி செயலாளர்களுடன் பேச்சு நடத்திய ஆட்சியாளர்கள், அவர்களும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தது. இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்தனர்.

ஆனால், அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றாததை உணர்ந்த ஊராட்சி செயலாளர்கள் கடந்த 4-ம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தைத் தொடரும் நிலையில், அவர்களிடம் அரசு பேசாமல், 500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்களை  அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் பணி நீக்க உத்தரவுகள் வட்டார வளர்ச்சி அலுவலர்களால்  பிறப்பிக்கப்பட்டு மாநில அளவில் ரகசியமாக பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மேலும் 600-க்கும் மேற்பட்டோரை ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு பணியிட மாற்றம் செய்திருக்கிறது. 

அடக்குமுறைகள் மூலம் பணியவைப்பதா?

ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற ஓய்வூதியம் வழங்க மறுப்பது அடக்குமுறையாகும். இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்களாக இருந்துவரும் நிலையில், அக்கிராமங்களின் ஊராட்சி செயலாளராக இருந்துவரும் இவர்களே அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பதிலாக அடக்குமுறைகள் மூலம் பணியவைக்க முயல்வது மிகத்தவறு.

எனவே அரசு பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு தகுதிக்கேற்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேலும், பணியிடை நீக்கம், பணியிட மாற்றம் போன்ற ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்து, ஊராட்சி செயலர்களை ஏற்கனவே இருந்த இடத்திலேயே பணி செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தமிழக அரசு அதிரடி: செஞ்சியில் ₹85 கோடியில் நான்கு வழிச்சாலை! பணியை தொடங்கி வைத்த ஆட்சியர்!
தமிழக அரசு அதிரடி: செஞ்சியில் ₹85 கோடியில் நான்கு வழிச்சாலை! பணியை தொடங்கி வைத்த ஆட்சியர்!
RAIN ALERT : மீண்டும் மழை.! அடுத்த 7 நாள் தமிழக வானிலை நிலவரம் என்ன.? அலர்ட் விடுத்த வானிலை மையம்
மீண்டும் மழை.! அடுத்த 7 நாள் தமிழக வானிலை நிலவரம் என்ன.? அலர்ட் விடுத்த வானிலை மையம்
தமிழ் மீது மோடி வைத்திருக்கும் மரியாதையே தனி..! ஆனா.. மத்திய அரசு இப்படி செய்யலாமா.? சீறிய இபிஎஸ்
தமிழ் மீது மோடி வைத்திருக்கும் மரியாதையே தனி..! ஆனா.. மத்திய அரசு இப்படி செய்யலாமா.? சீறிய இபிஎஸ்
காஞ்சிபுரம் காவல் நிலையம்: மரங்களை நேசிக்கும் புதிய கட்டடம்! காவலர்களுக்குக் கிடைத்த கௌரவம்!
காஞ்சிபுரம் காவல் நிலையம்: மரங்களை நேசிக்கும் புதிய கட்டடம்! காவலர்களுக்குக் கிடைத்த கௌரவம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
Rajya Sabha election : திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
TVK Thanjavur Meeting: மனைவி சங்கீதாவை வைத்து விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த தொண்டர்கள்!
TVK Thanjavur Meeting: மனைவி சங்கீதாவை வைத்து விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த தொண்டர்கள்!
TVK Vijay: ’’கரூர் டூ ஜனநாயகன்; என்னைச் சுற்றி இத்தனை விஷயங்களில் சதி நடக்கிறது’’- மவுனம் கலைத்த விஜய்!
TVK Vijay: ’’கரூர் டூ ஜனநாயகன்; என்னைச் சுற்றி இத்தனை விஷயங்களில் சதி நடக்கிறது’’- மவுனம் கலைத்த விஜய்!
சுயமரியாதையை சீண்டிப் பார்ப்பதா... தமிழர்களின் சூட்டை பாஜக உணர வேண்டிருக்கும்- எச்சரிக்கும் ஸ்டாலின்
சுயமரியாதையை சீண்டிப் பார்ப்பதா... தமிழர்களின் சூட்டை பாஜக உணர வேண்டிருக்கும்- எச்சரிக்கும் ஸ்டாலின்
TVK Vijay Election Promise: பயிர்க்கடன் தள்ளுபடி முதல் படிப்பு செலவு வரை; விஜய் அள்ளிக்கொடுத்த வாக்குறுதிகள் என்னென்ன.?
பயிர்க்கடன் தள்ளுபடி முதல் படிப்பு செலவு வரை; விஜய் அள்ளிக்கொடுத்த வாக்குறுதிகள் என்னென்ன.?
TVK Vijay Election Promise: மருத்துவம், பொறியியல் வரை இலவச கல்வி முதல் கடன் தள்ளுபடி வரை- விஜய்யின் அதிரடி வாக்குறுதிகள்!
TVK Vijay Election Promise: மருத்துவம், பொறியியல் வரை இலவச கல்வி முதல் கடன் தள்ளுபடி வரை- விஜய்யின் அதிரடி வாக்குறுதிகள்!
Kidney Disease Symptoms: சைலன்ட்டாக சம்பவம் செய்யும் கிட்னி நோய்; இந்த அறிகுறிகள் இருந்தா அசால்ட்டா இருந்துடாதீங்க
சைலன்ட்டாக சம்பவம் செய்யும் கிட்னி நோய்; இந்த அறிகுறிகள் இருந்தா அசால்ட்டா இருந்துடாதீங்க
Embed widget