Ravindranath MP: ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி மீது காரைக்குடியைச் சேர்ந்த காயத்ரி தேவி என்பவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.


பாலியல் புகார்:


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் காய்த்ரி தேவி. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு தனது கணவரை விவாகரத்து செய்து இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு ஓ.பி.ரவீந்திரநாத் பாலியல் தொல்லை கொடுத்ததாக  புகார் அளித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் அதிமுக எம்.பியான ரவீந்திநாத் மீது டிஜிபி அலுவலத்கத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.


அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ”2014ஆம் ஆண்டு என்னுடைய தோழியின் திருமணத்திற்கு சென்றபோது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்ப பெண்களிடம் நெருக்கமாக பழகினேன். இந்நிலையில், 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓ.பி.ரவீந்திரநாத்தின் நம்பரில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் அவர் பேசவில்லை.


அவர் நண்பர் முருகன் என்பவர் தன்னுடன் பேசினார். ஓ.பி.ரவீந்திரநாத் உங்கள் மீது ஆசைப்படுவதாகவும், நீங்கள் நெருக்கமாக இருக்க வேண்டும் எனவும் கூறினார். நான் இதை கேட்காததால் எனக்கு கொலை மிரட்டல் வந்தது. பின்னர், 2023 ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி நள்ளிரவு ரவீந்திரநாத் என்னை வாட்ஸ் ஆப்பில் கால் செய்தார். அண்ணன் என்ற முறையில் அவரது அழைப்பை நானும் ஏற்றேன். பின்னர், அவர் தன்னிடம் ஆபாசமாக பேசினார்” என்றார். 


"ஆபாசமாக பேசினார்”


மேலும், ”முதலின் நான் இதை பெரிதாக்க வேண்டாம் என்று நினைத்தேன்.  ஒரு கட்டத்தில் தனக்கு தொடர்ந்து அழைப்பு வந்தது. நெருக்கமாக இருக்க வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.  நான் இதற்கு சம்மதிக்காததால், குடும்பத்துடன் கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டல் விடுத்தார். இவர் இப்படி செய்தது மிகவும் அருவருப்பாக இருந்தது. இதனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ரவீந்திரநாத் குடும்பத்து பெண்களிடம் இதுபோன்று நடந்துக் கொள்வாரா? அப்படியே நடந்துக் கொண்டாலும் சும்மா இருப்பார்களா? சாதாரண வீட்டு பெண்கள் என்றால் அவ்வளவு இலக்காரமா?” என்று ஆவேசமாக பேசினார்.


தொடர்ந்த பேசிய அந்த பெண், ”ரவீந்திரநாத்தின் செயல்பாடுகள் குறித்து அவரது தந்தை ஓ.பன்னீர்செல்வத்திடம் முறையிட்டதாகவும், ஆனால் தனது பேச்சை கேட்கும் நிலையில், மகன் இல்லை எனக் கூறிவிட்டதாக" காய்த்ரி தேவி கூறினார். தற்போது, ஓ.பி.ரவீந்திரநாத் மீது எழுந்துள்ள புகார் அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே தேனியில் வெற்றி செல்லுமா செல்லாதா என நீதிமன்றத்தில் வழக்குகளை சந்தித்து வரும் நிலையில், தற்போது பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தது அவருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க 


“500 கிளிகளுக்கு இறக்கைகளே இல்லை; வெட்டியுள்ளனர்” - அதிர்ச்சி தகவலால் வனத்துறையின் அதிரடி முடிவு