மேலும் அறிய

Ramanathapuram: தேசிய அளவில் வென்ற அரசுப் பள்ளி மாணவி - கல்வி அமைச்சர் பாராட்டு

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மாணவி அ.பிருந்தா உள்ளிட்ட சாதனையாளர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.

தமிழ்நாடு அளவில் தேர்வு செய்யப்பட்டதில் பிருந்தா மட்டும்தான் அரசுப் பள்ளி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
 
வீர் கதா போட்டியில் அரசுப் பள்ளி மாணவி
 
வீர் கதா போட்டியில் தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டு புதுடெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பு மாணவி அ.பிருந்தாவுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போனில் வாழ்த்து தெரிவித்தார். இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் கல்வித்துறை இணைந்து ஒவ்வொரு ஆண்டும் வீர் கதா போட்டியை நடத்தி வருகின்றன. இதில் முதல் இந்திய சுதந்திரப்போரில் பழங்குடியினரின் எழுச்சி, ராணி லட்சுமிபாய் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள், விடுதலைக்குப் பின் வீரதீர செயல்களுக்கான விருது பெற்றவர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் அறியச்செய்து அதன்மூலம் நாட்டுப்பற்றையும், குடிமை உணர்வையும் அவர்களிடம் வளர்க்கும் நோக்கில், ஓவியம், கவிதை, கட்டுரை, பல்லூடக விளக்கக் காட்சி போன்ற போட்டிகள் நடைபெறும்.
 
அன்பில் மகேஷ் பொய்யாமொழி போனில் வாழ்த்து

இந்தாண்டு நடந்த போட்டியில் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 2.31 லட்சம் பள்ளிகளிருந்து சுமார் 1.76 கோடி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 3-5, 6-8, 9-10, 11-12 ஆகிய வகுப்புகளில் ஒவ்வொரு பிரிவிலும் 25 மாணவர்கள் என தேசிய அளவில் மொத்தம் 100 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு பயிலும் அய்யாத்துரை என்பவர் மகள் அ.பிருந்தா, 9-10 வகுப்பு பிரிவில் தேசிய அளவில் 25 பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஆங்கில பட்டதாரி ஆசிரியரும் பள்ளியின் நூலகப் பொறுப்பாளருமான க.வளர்மதியின்  வழிகாட்டுதலில் 'ராணி லட்சுமி பாய் என் கனவில் வந்தார். நம் நாட்டுக்கு நான் சேவை செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தார். இம்மாணவிக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போனில் வாழ்த்து தெரிவித்து தொடர்ந்து இதுபோல் சாதனை புரியவும் ஊக்கப்படுத்தியுள்ளார். 
 
குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினர்

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மாணவி அ.பிருந்தா உள்ளிட்ட சாதனையாளர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார். புதுடெல்லி கர்தவ்ய பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தமிழ்நாடு அளவில் தேர்வு செய்யப்பட்டதில் பிருந்தா மட்டும்தான் அரசுப் பள்ளி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி அ.பிருந்தா, வழிகாட்டிய  ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் க.வளர்மதி ஆகியோரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.சின்னராசு, பள்ளித் தலைமையாசிரியர் ச.யுனைசி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

குடும்பத்தையே பிரித்த ஆதவ் ஆர்ஜூனா... தூக்கி எறிந்த திமுக, விசிக- உண்மையை போட்டுடைக்கும் சார்லஸ் மார்ட்டின்
குடும்பத்தையே பிரித்த ஆதவ் ஆர்ஜூனா... தூக்கி எறிந்த திமுக, விசிக- உண்மையை போட்டுடைக்கும் சார்லஸ் மார்ட்டின்
TVK VIJAY: விஜய்க்கு கிடைக்கப்போவது இந்த சின்னமா.?  தேர்தல் ஆணையத்தில் லிஸ்ட்டை கொடுத்த தவெக
விஜய்க்கு கிடைக்கப்போவது இந்த சின்னமா.? தேர்தல் ஆணையத்தில் லிஸ்ட்டை கொடுத்த தவெக
SC on SIR Ban: SIR-க்கு தடை கோரிய வழக்கு; தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உத்தரவு; பணிகள் தொடரலாம் - உச்சநீதிமன்றம்
SIR-க்கு தடை கோரிய வழக்கு; தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உத்தரவு; பணிகள் தொடரலாம் - உச்சநீதிமன்றம்
Tasmac: மதுப்பிரியர்களுக்கு குஷி.! இனி ஒரு ரூபாய் கூட கூடுதலாக வாங்க முடியாது- டாஸ்மாக்கில் அசத்தலான திட்டம் அறிமுகம்
மதுப்பிரியர்களுக்கு குஷி.! இனி ஒரு ரூபாய் கூட கூடுதலாக வாங்க முடியாது- டாஸ்மாக்கில் அசத்தலான திட்டம் அறிமுகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Terrorist Umar Mohammed Profile| பாகிஸ்தானின் SLEEPER CELL பழிதீர்க்க வந்த பயங்கரவாதியார் இந்த உமர்?
Delhi Car Blast CCTV | டெல்லி கார் குண்டு வெடிப்புபின்னணியில் காஷ்மீர் மருத்துவர்?சிசிடிவி காட்சிகள்
ஆட்டோ, விசில், பேட்... விஜய்யின் 10 சின்னம்! தேர்தல் ஆணையத்தில் தவெக
மழைக்கு ரெடியா? நவம்பர் நிலைமை என்ன?வெதர்மேன் அப்டேட்
Delhi Car Blast | செங்கோட்டை அருகேவெடித்து சிதறிய கார்பதற்றத்தில் டெல்லி!பரபரப்பு காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குடும்பத்தையே பிரித்த ஆதவ் ஆர்ஜூனா... தூக்கி எறிந்த திமுக, விசிக- உண்மையை போட்டுடைக்கும் சார்லஸ் மார்ட்டின்
குடும்பத்தையே பிரித்த ஆதவ் ஆர்ஜூனா... தூக்கி எறிந்த திமுக, விசிக- உண்மையை போட்டுடைக்கும் சார்லஸ் மார்ட்டின்
TVK VIJAY: விஜய்க்கு கிடைக்கப்போவது இந்த சின்னமா.?  தேர்தல் ஆணையத்தில் லிஸ்ட்டை கொடுத்த தவெக
விஜய்க்கு கிடைக்கப்போவது இந்த சின்னமா.? தேர்தல் ஆணையத்தில் லிஸ்ட்டை கொடுத்த தவெக
SC on SIR Ban: SIR-க்கு தடை கோரிய வழக்கு; தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உத்தரவு; பணிகள் தொடரலாம் - உச்சநீதிமன்றம்
SIR-க்கு தடை கோரிய வழக்கு; தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உத்தரவு; பணிகள் தொடரலாம் - உச்சநீதிமன்றம்
Tasmac: மதுப்பிரியர்களுக்கு குஷி.! இனி ஒரு ரூபாய் கூட கூடுதலாக வாங்க முடியாது- டாஸ்மாக்கில் அசத்தலான திட்டம் அறிமுகம்
மதுப்பிரியர்களுக்கு குஷி.! இனி ஒரு ரூபாய் கூட கூடுதலாக வாங்க முடியாது- டாஸ்மாக்கில் அசத்தலான திட்டம் அறிமுகம்
Delhi Bomb Blast: டெல்லி குண்டுவெடிப்பு; 12 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை- அமித்ஷா தலைமையில் அவசரக்கூட்டம், உறுதியளித்த ராஜ்நாத்!
Delhi Bomb Blast: டெல்லி குண்டுவெடிப்பு; 12 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை- அமித்ஷா தலைமையில் அவசரக்கூட்டம், உறுதியளித்த ராஜ்நாத்!
TN weatherman: அடுத்தடுத்து வருகிறதா புதிய புயல் சின்னம்.! தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குமா.? வெதர்மேன் சொல்லுவது என்ன.?
அடுத்தடுத்து வருகிறதா புதிய புயல் சின்னம்.! தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குமா.? வெதர்மேன் சொல்லுவது என்ன.?
Asst Professors: மிஸ் பண்ணிடாதீங்க...உதவிப் பேராசிரியர் பணிக்கு கடைசி வாய்ப்பு! டிஆர்பி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Asst Professors: மிஸ் பண்ணிடாதீங்க...உதவிப் பேராசிரியர் பணிக்கு கடைசி வாய்ப்பு! டிஆர்பி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Ravindra Jadeja: கொண்டாடப்படாத ஜாம்பவான்.. ஜடேஜாவின் ஐபிஎல் பயணம் - 12 லட்சத்தில் தொடங்கி 18 கோடி, சாதனைகள் லிஸ்ட்
Ravindra Jadeja: கொண்டாடப்படாத ஜாம்பவான்.. ஜடேஜாவின் ஐபிஎல் பயணம் - 12 லட்சத்தில் தொடங்கி 18 கோடி, சாதனைகள் லிஸ்ட்
Embed widget