மேலும் அறிய

டெல்லியில் சிஎம் விஜய்; தமிழக உரிமைகளை வென்றெடுக்கஎன்ன செய்யணும்? 8 முக்கிய கோரிக்கைகள்

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் என்னென்ன கோரிக்கைகள் வலியுறுத்தப்பட வேண்டும்? ராமதாஸ் ஆலோசனை.

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை தமிழக முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக 8 கோரிக்கைகளையும் அவர் பட்டியலிட்டு உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் கூறி உள்ளதாவது:

டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழ்நாட்டின் வளர்ச்சி,  நிதி உரிமை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. தொழில், கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தித்துறை மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல துறைகளில் தமிழ்நாடு நாட்டிற்கு குறிப்பிடத்தக்க வருவாயை வழங்கி வருகிறது. எனவே தமிழ்நாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கீடுகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படுவது அவசியமாகும்.

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பின்வரும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட வேண்டும்:

  • மக்கள் தொகை அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்து, வளர்ச்சி குறியீடுகள் மற்றும் மாநிலங்களின் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டு நிதி வழங்க வேண்டும்.
  • கல்வித் துறையில் புதிய பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு மையங்களுக்கு கூடுதல் மத்திய நிதி வழங்க வேண்டும்.
  • அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு சிறப்பு நிதித் தொகுப்பு அறிவிக்க வேண்டும்.
  • சென்னை, கோயம்புத்தூர்,  மதுரை,  திருச்சி,  தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ, ரயில், துறைமுகம் மற்றும் விமான நிலைய விரிவாக்கத் திட்டங்களுக்கு மத்திய அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
  • காவிரி டெல்டா பகுதிகள், வறட்சி பாதிப்பு மாவட்டங்கள் மற்றும் விவசாய உற்பத்தி மண்டலங்களுக்கு தனி வேளாண் மேம்பாட்டு நிதி வழங்கப்பட வேண்டும்.
  • தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் புதிய தொழிற்பேட்டைகள், பாதுகாப்புத் தொழிற்சாலைகள், கப்பல் கட்டும் தொழில்கள் மற்றும் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
  • வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள தமிழ்நாட்டிற்கு நிரந்தர பேரிடர் நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும்.
  • ஜி.எஸ்.டி. இழப்பீடு, மத்திய வரி பகிர்வு மற்றும் மாநிலங்களின் நிதி சுயாட்சியை உறுதி செய்யும் வகையில் உரிய நிதி வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு நாட்டின் வளர்ச்சிக்கு வழங்கும் பங்களிப்புக்கு ஏற்ப உரிய நிதியும், வளர்ச்சித் திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் நியாயமான எதிர்பார்ப்பாகும். இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் மாநிலத்தின் உரிமைகளையும் தேவைகளையும் உறுதியுடன் வலியுறுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் நலன், வளர்ச்சி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்காக மத்திய அரசிடமிருந்து உரிய நிதியையும் திட்டங்களையும் பெற்றுத் தருவதற்கான வலுவான குரலாக இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கைகள் ஒலிக்க வேண்டும்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

காவலர் நியமனம் ஒத்திவைப்பு.. பதவி உயர்வு காத்திருப்பு; விஜய்க்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்!
காவலர் நியமனம் ஒத்திவைப்பு.. பதவி உயர்வு காத்திருப்பு; விஜய்க்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்!
ரேஷன் கார்டு, பேங்க் புக் வச்சிருக்கீங்களா? அப்போ உடனே படிங்க! செங்கல்பட்டு ஆட்சியர் அறிவிப்பு!
ரேஷன் கார்டு, பேங்க் புக் வச்சிருக்கீங்களா? அப்போ உடனே படிங்க! செங்கல்பட்டு ஆட்சியர் அறிவிப்பு!
ஜூலை 17 முதல் இதை உடனே செய்யுங்க! செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு!
ஜூலை 17 முதல் இதை உடனே செய்யுங்க! செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

''லஞ்சம் ஊழல் NO EXCUSE'' சாட்டை சுழற்றும் விஜய் அதிகாரிகள் 6 பேர் SUSPEND
”ஊழல் பண்ண பதவி காலி” CM விஜய் வார்னிங்! பதறும் தவெக அமைச்சர்கள்
”வெயில்ல நிக்காம போறாரு” கேள்வி கேட்ட பொதுமக்கள் ESCAPE ஆன அமைச்சர் ஸ்ரீநாத்!
Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
Embed widget