தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்த இரண்டாம் அலைக்கு பலரும் தங்களுடைய சொந்த பந்தங்களை இழந்து வாடி வருகின்றனர். பொருளாதார இழப்பு தாண்டி நெருக்கமானவர்களின் உயிரிழப்பு பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக சினிமா நட்சத்திரங்கள் பலரும் உயிரிழந்திருப்பதுடன், பத்திரிகையாளர்கள் பலரும் தங்களுடைய உயிரை இழந்திருக்கிறார்கள்.



ராஜுமுருகன்



சில தினங்களுக்கு முன்பாக பிரபல இந்து ஆங்கில பத்திரிகையின் இளம் வயது நிருபர் பிரதீப் குமார் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இந்நிலையில் நியூஸ் 18 தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றி வந்த இயக்குநர் ராஜூ முருகனின் உடன்பிறந்த சகோதரர் குரு என்கிற குமரகுருபரன் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார்.இவரது இறப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இயக்குநர் ராஜூ முருகன் 'குக்கூ'ஜோக்கர்' மற்றும் 'ஜிப்ஸி' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது