வடகிழக்கு பருவமழை தொடங்கி கிட்டத்தட்ட 40 நாட்கள் மேலாகியும் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. அதற்கு மாறாக கடும் பனிபொழிவு நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வந்தாலும் அவ்வப்போது ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருக்கா? எந்தெந்த மாவட்டங்கள்? என்ற விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை

அதாவது தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கீழ் அடுக்குகளில் வடகிழக்கு பருவக் காற்று வீசுகிறது. இதன் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டிய மாவட்டங்கள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. 

அதேபோல் நாளை வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். 

Continues below advertisement

இதையும் படிங்க: Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்! அரையாண்டு தேர்வுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?

இடி மின்னலுடன் மழை

மேலும் டிசம்பர் 1ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

டிசம்பர் 2ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 

டிசம்பர் 3ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்களை ஒட்டிய பகுதிகள், தென் கடலோர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். 

இதையும் படிங்க: TN Govt: லட்சம் லட்சமாக சம்பாதிக்க செம சான்ஸ்.. தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்.. டிசம்பர் 5 கடைசி நாள்!

டெல்டாவில் மிரட்டப்போகும் மழை

டிசம்பர் 4ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்யக்கூடும். கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 5ம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். கடலூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களில்  ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.