காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை: இன்று மழை வெளுக்கப்போகுதா? வானிலை அறிக்கை பரபரப்பு!
Weather Forecast Today: "காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்றைய வானிலை நிலவரம் குறித்து தெரிந்து கொள்வோம்"

Kanchipuram Weather Forecast: தமிழ்நாட்டில் பல மாவட்டங்களுக்கு மழைய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை நிலவரம் தெரிந்து கொள்வோம்
தமிழகத்தில் இன்று வானிலை நிலவரம் என்ன ?
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்யாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் தமிழகத்தில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட வானிலை நிலவரம் ? - Kanchipuram Weather Forecast Today ( 07-11-2025)
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை நேற்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை தொடர்ந்து கன மழை பெய்தது. அதன் பிறகு இரவு நேரங்களிலும் விட்டுவிட்டு அவ்வப்போது மழை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை நேற்று 3.64 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. வாலாஜாபாத் பகுதியில் 4.6 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. ஸ்ரீபெரும்புதூரில் 3.62 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. உத்திரமேரூரில் 1.64 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. குன்றத்தூரில் ஒரு சென்டிமீட்டர் மழையும், செம்பரம்பாக்கம் பகுதியில் 1.4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியது.
காஞ்சிபுரத்தை பொருத்தவரை இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் அதற்கு ஏற்றவாறு முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு வானிலை நிலவரம் - Chengalpattu Weather Forecast Today
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்தது. தொடர்ந்து இன்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டிலும் மாலை நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு பொருத்தவரை காற்று 6 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். காற்றில் ஈரப்பதம் 90% வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தின் நிலை என்ன ? Thiruvallur Weather Forecast Today
திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை இன்று மழைக்கு வாய்ப்பு மிக குறைவு என கணிக்கப்பட்டுள்ளது. வானம் மேகத் மூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம் 91 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வானிலை நிலவரம்? Rainpet Weather Forecast Today
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மழை கொட்டி தீர்த்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த மழையால் சாலையில் நேற்று பல்வேறு இடங்களில் தண்ணீர் ஓடியது. இன்றும் இராணிப்பேட்டை மாவட்டத்தை பொருத்தவரை மாலை நேரங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 12 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளிலும் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





















