20 லட்சத்துக்கு அதிகமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசு தங்களை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என்று கரூர் மாவட்ட கல்குவாரி, கிரஷர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டியளித்தார்.

Continues below advertisement

 

 

Continues below advertisement

கரூர் மாவட்டம், க.பரமத்தி அடுத்த புதுக்கநல்லி பகுதியில் கரூர் மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனரின் டிஜிட்டல் சர்வே நடவடிக்கையை கைவிடக்கோரி கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் இந்த காத்திருப்பு போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிரஷர், டிப்பர் லாரி மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கரூர் மாவட்ட கல் குவாரி மற்றும் கிரசர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணி பேசுகையில்,

குவாரிகளை நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 

 

 

 

புவியியல் மற்றும் சுரங்கத் துறை சார்பில் குவாரிகளில் டிஜிட்டல் சர்வே என்ற பெயரில் நடத்தப்படும் அளவீடுகளில் முரண்பாடு உள்ளது. குவாரி உரிமையாளர்களை நேரில் வைத்துக் கொண்டு அளவீடுகள் செய்யாமல் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டு 20 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரு நிறுவனங்கள் பாலங்கள் சாலைகள் உள்ளிட்ட அவற்றுக்கு தேவையான மூலப்பொருட்களான ஜல்லிக்கற்கள் குவாரிகள் மூலமாக செல்வதால் அந்த வேலைகளிலும் தடை ஏற்படும். 

 

 

 

 

 

 

எனவே தமிழக அரசு எங்களது கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தமிழக முதல்வர் எங்களை அழைத்துப் பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைத்துக் கொள்கிறோம். சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகளுக்கு எங்களது சங்கம் துணை நிற்காது. கரூர் மாவட்டத்தில் சமீபத்தில் விதிக்கப்பட்ட அபராதங்களில் உடன்பாடு இல்லை. ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒரு முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தடையின்மை சான்று வாங்கி தான் தொழில் நடத்துகிறோம். ஆனால், 15 வருடங்களுக்கு முன்பு இருந்த குறைகளை இப்போது கூறுகின்றனர் என்றார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.