மேலும் அறிய

தள்ளுவண்டி கடைகளால் பெருச்சாளி தொல்லை, நோய் அபாயம்; முதல்வர் விஜய்க்கு பாஜக முக்கிய கோரிக்கை!

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருவோர உணவு தள்ளுவண்டி கடைகள் குறித்தும் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகி உள்ளது- பாஜக.

தெருவோர உணவு தள்ளுவண்டி கடைகளால் பெருச்சாளி தொல்லை உருவாகி உள்ளதாகவும் அவற்றை அகற்றுவதற்கு பதிலாக உணவுக் கட்டுப்பாட்டு மையம் அமைக்க வேண்டும் எனவும் முதல்வர் விஜய்க்கு பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பாஜக தொண்டு நிறுவனங்கள் பிரிவு மாநிலத் தலைவர் அர்ஜூன மூர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறி உள்ளதாவது:

’’தமிழக மாநில முதலமைச்சர் ஜோசப் விஜய் முயற்சியால் மக்கள் முகம் சுளித்த 717 டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பொதுமக்களின் மனநிலையை உணர்ந்து செயல்படும் இந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

குடியிருப்பு பகுதிகளில் பெருச்சாளி தொல்லை

அதேபோல், சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருவோர உணவு தள்ளுவண்டி கடைகள் குறித்தும் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகி உள்ளது. பல இடங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் இயங்கும் இத்தகைய கடைகள் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் பெருச்சாளி தொல்லை அதிகரித்து வருகிறது.

மேலும் வீடுகளின் முன்பாக அதிகளவில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் தங்களது வீட்டிற்குள் வாகனங்களை நிறுத்த முடியாமல் சிரமப்படுவதுடன், தேவையற்ற சண்டை சச்சரவுகளும் உருவாகின்றன.

உடல்நலப் பாதிப்பு அபாயம்

இதனுடன், போதிய உணவு சுகாதார கட்டுப்பாடுகள் இல்லாமல் உணவு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் உடல்நலப் பாதிப்புகளுக்கும் ஆளாகும் அபாயம் உள்ளது.

உணவு கட்டுப்பாட்டு மையங்கள்

ஆகையால், தெருவோர உணவகங்களை முழுமையாக அகற்றுவதற்குப் பதிலாக, சிங்கப்பூர் போன்ற முன்னேறிய நகரங்களில் உள்ளதைப் போல சுகாதார கட்டுப்பாடுகளுடன், போக்குவரத்திற்கும் குடியிருப்பு பகுதிகளுக்கும் இடையூறு இல்லாத வகையில் “உணவு கட்டுப்பாட்டு மையங்கள்” (Food Courts / Hawker Centres) அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டுகிறேன்.

நகர வளர்ச்சியும், பொதுச் சுகாதாரமும், சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரமும் சமநிலையுடன் பாதுகாக்கப்படும் ஒரு நிர்வாக மாதிரியை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என்று அர்ஜூன மூர்த்தி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: இடி, மின்னலுடன் இன்று எந்தெந்த மாவாட்டங்களில் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று எந்தெந்த மாவாட்டங்களில் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலால் இளம்பெண்ணுக்கு நடுரோட்டில் நடந்த பயங்கரம்
திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலால் இளம்பெண்ணுக்கு நடுரோட்டில் நடந்த பயங்கரம்
சத்குருவின் கிருஷ்ண லீலா நூல்: வாழ்க்கை போராட்டமல்ல, விளையாட்டே!
சத்குருவின் கிருஷ்ண லீலா நூல்: வாழ்க்கை போராட்டமல்ல, விளையாட்டே!
ADMK: தவெக நிர்வாகிகள் மீது பாலியல் வழக்குகள்: நியாயமான விசாரணை நடக்குமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
ADMK: தவெக நிர்வாகிகள் மீது பாலியல் வழக்குகள்: நியாயமான விசாரணை நடக்குமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Bungee Jumping Accident | உயிரைப் பறித்த BUNGEE JUMPING! கயிறு கட்ட மறந்த ஊழியர்கள்..பரிதாபமாக உயிரிழந்த பெண்
Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
Caste Certificate Issue : அதிகாரிகள் அலட்சியம். ஊசலாடும் ராணுவ பணி கனவு? குடுகுடுப்பைகாரர் மகன் வேதனை!
Srivaikuntam TVK issue :
Kerala Baby: நடுரோட்டில் கைக்குழந்தை!அதிவேகத்தில் வந்த பேருந்து..நடத்துநர் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: இடி, மின்னலுடன் இன்று எந்தெந்த மாவாட்டங்களில் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று எந்தெந்த மாவாட்டங்களில் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Trump Vs Netanyahu: பெய்ரூட் தாக்குதல்; இஸ்ரேலை கண்டித்து எச்சரிக்கையும் விடுத்த ட்ரம்ப்; என்ன சொல்லி இருக்கார் பாருங்க
பெய்ரூட் தாக்குதல்; இஸ்ரேலை கண்டித்து எச்சரிக்கையும் விடுத்த ட்ரம்ப்; என்ன சொல்லி இருக்கார் பாருங்க
France Modi Macron: பிரான்ஸில் ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026‘ மாநாடு; தொடங்கி வைத்த மேக்ரான்; பிரதமர் மோடி பேசியது என்ன.?
பிரான்ஸில் ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026‘ மாநாடு; தொடங்கி வைத்த மேக்ரான்; பிரதமர் மோடி பேசியது என்ன.?
ADMK: தவெக நிர்வாகிகள் மீது பாலியல் வழக்குகள்: நியாயமான விசாரணை நடக்குமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
ADMK: தவெக நிர்வாகிகள் மீது பாலியல் வழக்குகள்: நியாயமான விசாரணை நடக்குமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
US-Iran டீலுக்கு ஆப்பு.! ட்ரம்ப்புக்கு எதிராக செயல்படும் நெதன்யாகு; பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்
US-Iran டீலுக்கு ஆப்பு.! ட்ரம்ப்புக்கு எதிராக செயல்படும் நெதன்யாகு; பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்
TMC Quits NDA: தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது தமாகா; GK வாசன் கூறிய காரணம் என்ன தெரியுமா.?
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது தமாகா; GK வாசன் கூறிய காரணம் என்ன தெரியுமா.?
190 கி.மீட்டர் முதல் 400 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் Simple Energy இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
190 கி.மீட்டர் முதல் 400 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் Simple Energy இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
US Iran Peace Deal: ‘தடை நீக்கம், டெஹ்ரானுக்கு நிவாரணம்‘; US-Iran ஒப்பந்தத்தில் உள்ளது என்ன.? வெளியான முக்கிய தகவல்
‘தடை நீக்கம், டெஹ்ரானுக்கு நிவாரணம்‘; US-Iran ஒப்பந்தத்தில் உள்ளது என்ன.? வெளியான முக்கிய தகவல்
Embed widget