கடக ராசி - புரட்டாசி மாத ராசி பலன் 2025
அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு முயற்சியின் வெற்றிக்கு அதிபதி புதன் உச்சம் பெற்று கன்னி ராசியில் உங்களுக்கு தேவையான வலிமையை கொடுக்கிறார்… குறிப்பாக ராசிக்கு 12 ஆம் அதிபதி மூன்றாம் வீட்டில் இப்படி ஒரு நல்ல நிலைமையில் இருக்கும்போது தைரியமாக நீங்கள் மனதில் நினைப்பதை வெளியில் பேசலாம் அதேபோல தள்ளிப் போன காரியங்கள் நீங்கள் முடியாது என்று நினைத்த காரியங்கள் கூட தற்போது வெற்றியாக முடிய வாய்ப்பு உண்டு… மேடைகளில் நீங்கள் பேச அழைக்கப்படுவீர்கள் விழாக்களின் நாயகனாக மாறப் போகிறீர்கள்… சிலருக்கு உள்ளூரிலேயே நல்ல பெயர் அப்படிப்பட்ட உங்களுக்கு வெளியூரில் வெளிநாட்டில் தொடர்பு ஏற்பட்டு அற்புதமான பலன்களை வாரி வழங்குகிறார்கள் புதன்…
மூன்றாம் வீட்டிற்கு பதினோராம் வீடாக உங்களுடைய ராசி வரும் போது தொட்டதெல்லாம் துணங்கும் கேட்டதெல்லாம் கிடைக்கும் என்கிற வகையில் நல்ல பெரிய பலன்களை நீங்கள் பெற போகிறீர்கள் வீடு மனை யோகம் உண்டு அதேபோல பழைய வாகனம் கொடுத்து புதிய வாகனம் வாங்குதல் வீடு மாறுதல் வாடகைக்கு இருந்த வீட்டை விட்டு புது வீடு குடி புகுதல்..
சனிபகவான் உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் வந்து கொண்டிருக்கிறார் ஆனால் அது நவம்பர் வரை மட்டுமே ஆகையால் வேலை நிமித்தமாக சங்கடங்களை சந்தித்தவர்கள் கூட நவம்பருக்கு பிறகு நல்ல பல மாற்றங்களை பெறுவீர்கள் புதிய ஆபரணங்கள் உங்களுக்கு தேவையான உபயோகப் பொருட்கள் போன்றவற்றை வாங்கி மகிழுங்கள் படிப்பு ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கப் போகிறது புதிதாக படிக்க வேண்டும் என்று இருக்கிறவர்கள் ஆல்ரெடி கல்லூரிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள் யாராக இருந்தாலும் நல்ல பலன்களை தற்போது சகித்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்ல உயர்வான அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பீர்கள்…
கடக ராசிக்கு சவாலான காரியம் என்னவென்றால் இரண்டில் கேது இருப்பது நாவடக்கம் சற்று நல்ல பலன்களை கொண்டு வரவும் கோபப்பட்டு வீணான வார்த்தைகளை விடுவது சற்றென்று ஆக்ரோஷப்பட்டு கட்டுவது யார் எதிரில் இருக்கிறார்கள் என்பதை கூட பார்க்காமல் வார்த்தைகளை விடுவது போன்றவற்றால் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும் குடும்பத்தில் இருப்பவர்கள் சமாளித்து விடலாம் ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஏன் இவர் இவ்வளவு கோபப்படுகிறார் என்று தோன்றலாம்… எட்டில் இருக்கும் ராகு நல்ல படத்தில் திடீர் அதிர்ஷ்டங்களை உங்களுக்கு கொண்டு வருவார் கும்பத்தில் இருக்கும் ராகு உடன் ஆட்சி பெற்ற சனி வந்து சேரும்போது மனதிற்கு இனிய பல எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறும் எதிரிகள் கூட உங்களிடம் வந்து பேசுமாவதற்கு நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்…
உடலில் சில பாகங்களில் எரிச்சல் ஏற்படும் வலி கூட ஏற்படலாம் பாதத்தில் சிக்கல்கள் எரிச்சல் போன்ற உடல் பலவீனங்களுக்கு ஆட்பண்ணலாம் இப்படியான காலகட்டத்தில் பகவான் ஸ்ரீ விஷ்ணுவை வணங்குங்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு கொடுக்கக்கூடிய பிரசாதத்தை வாங்கி உண்ணுங்கள் உடலில் இருக்கக்கூடிய நோய்கள் தெய்வங்களால் சுகமாகும்… கத்திரிக்காய் போன்ற உடலுக்கு உஷ்ணத்தைத் தரக்கூடிய பதார்த்தங்களை வாரத்திற்கு ஒரு முறை எடுத்துக் கொள்வது நல்லது உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் அது சம்பந்தப்பட்ட உணவையும் தீவிரமாக தவிர்ப்பது நல்லது…
புரட்டாசி மாதத்தை பொறுத்தவரை உங்களுக்கு சாதகமாக அதிகப்படியான நல்லவைகள் உங்களுக்கு நடக்கப் போகிறது… தெய்வ பக்தியுடன் நகர்த்தி செல்லுங்கள் நல்லதே நடக்கும்…