Pudukkottai Power Cut (06.09.25): புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 6 ஆம் தேதி) பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுகிறது. அதனால மக்களே நீங்கள் முன்கூட்டியே குடிநீர் பிடித்தல், தண்ணீர் நிரப்பிக் கொள்ளுதல் போன்ற முக்கியமான அத்தியாவசிய தேவைகளை செய்துக்கோங்க. அப்படியே உங்க ஏரியாவும் லிஸ்ட்ல இருக்கான்னு செக் செய்து கொள்ளுங்க.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 6 ) இந்த பகுதியில் எல்லாம் மின்சார விநியோகம் இருக்காத. மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சில முக்கிய இடங்களில் மின் தடை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
நாளைய மின் தடை எங்கே?
அமரடக்கி, ஆவுடையார்கோயில், கொடிகுளம், நாகுடி, வல்லவரி ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை மின் தடை செய்யப்படவுள்ளது.
முன்னெச்சரிக்கை:
புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள மின் தடையை முன்னிட்டு மக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மின் தடை ஏற்படுவதற்கு முன்பு மொபைல் போன்கள், பவர் பேங்க், லாப்டாப் போன்ற சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ள வேண்டும். குடிநீர் தேவைக்கு போதுமான அளவு தண்ணீர் சேமித்து வைக்க பரிந்துரைக்கப்படுகிறது. உணவுப் பொருட்கள் கெடாமல் இருக்க குளிர்சாதனப் பெட்டியை அடிக்கடி திறக்காமல் இருக்க வேண்டும். அவசர தேவைக்காக மெழுகுவர்த்தி, பேட்டரி விளக்கு அல்லது அவசர மின் விளக்குகளை தயாராக வைத்துக் கொள்ளவும். மேலும், மருத்துவ கருவிகள் மின்சாரத்தில் இயங்கினால், அவற்றுக்கான மாற்று ஏற்பாடுகளை முன்னதாக செய்து கொள்வது அவசியம். மின்சாரம் திரும்ப வரும் போது சாதனங்கள் சேதமடையாமல் இருக்க பிளக் நீக்கி வைப்பது நல்லது.