புதுச்சேரி கல்லூரியில் பயின்றவருக்கு அமெரிக்காவில் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பொறுப்பு

சியாட்டில்/அமெரிக்கா, செப்டம்பர் 4, 2025 – உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI, தனது பயன்பாடுகள் பிரிவின் (Applications Division) தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO of Applications) புதுச்சேரி பொறியியல் கல்லூரி (Pondicherry Engineering College – PEC) முன்னாள் மாணவர் விஜய் ராஜியை நியமித்துள்ளது.

Continues below advertisement

இந்த நியமனத்துடன் இணையாக, விஜய் ராஜி நிறுவிய Statsig எனும் தயாரிப்பு பரிசோதனை மற்றும் தரவுத்தள சேவை வழங்கும் நிறுவனத்தை, OpenAI $1.1 பில்லியன் மதிப்பிலான முழு பங்கு (all-stock) ஒப்பந்தத்தில் கையகப்படுத்துகிறது.

OpenAI வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், “உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு A/B Testing, Feature Flagging மற்றும் ரியல்-டைம் முடிவெடுப்பு சேவைகளை வழங்கும் நம்பகமான தளமாக Statsig விளங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சேவைகள், OpenAI பயன்பாடுகளின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும்” எனத் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

விஜய் ராஜி, OpenAI பயன்பாடுகள் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி பிட்ஜி சிமோ (Paige Simo) அவர்களுக்கு நேரடியாக பதிலளிக்கும் பொறுப்பை ஏற்கவுள்ளார்.

  •  Statsig – தயாரிப்பு பரிசோதனையின் முன்னணி பிளாட்ஃபாரம்
  • விஜய் ராஜி நிறுவிய Statsig நிறுவனம்:
  • தயாரிப்பு பரிசோதனை (Product Experimentation)
  •  A/B Testing
  •  Feature Flagging
  •  Real-time Decision Making

போன்ற துறைகளில் முன்னணியில் உள்ள தொழில்நுட்ப தளமாகக் காணப்படுகிறது. இந்த ஒப்பந்தம் அமெரிக்க கட்டுப்பாட்டு அமைப்புகளின் அனுமதிக்கு உட்பட்டதாகும்.

ஒப்பந்தம் நிறைவு பெற்ற பின், Statsig அதன் சியாட்டில் (Seattle) அலுவலகத்திலிருந்தே சேவைகளை தொடரும். அனைத்து பணியாளர்களுக்கும் OpenAI-யில் இணையும் வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PEC-யிலிருந்து OpenAI வரையிலான பயணம், விஜய் ராஜி, 1995-1999 காலப்பகுதியில், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் (ECE) துறையில் புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் கல்வி பயின்றவர். இக்கல்லூரி இன்று புதுச்சேரி டெக்னாலஜிக்கல் பல்கலைக்கழகம் (PTU) என்ற பெயரில் இயங்கி வருகிறது.

அவரது தொழில்நுட்பப் பயணம்:

முன்னாள் Facebook மேலாளராக பணியாற்றிய அனுபவம், புதிய தயாரிப்புகளை உருவாக்கும் மேதையாக பெயர் பெற்றவர். சொந்தமாக நிறுவிய Statsig இன்று உலகம் பேசும் தொழில்நுட்ப நிறுவனமாக மாறியுள்ளது, இந்திய தொழில்துறைக்கு பெருமை, விஜய் ராஜியின் இந்த சாதனை, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் இந்திய தொழில்நுட்ப உலகுக்கு ஒரு பெருமை சேர்த்துள்ளது.

ஒரு சாதாரண மாணவரும் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்

இது குறித்து கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை வட்டாரங்கள் கூறும் போது, "இவ்வாறு உலகத் தரத்தில் இந்தியர்களும், குறிப்பாக மாநிலக் கல்வி நிலையங்களைச் சேர்ந்தவர்களும் உயர்படிகளில் பங்கு பெறுவது இன்றைய இளைஞர்களுக்கே ஒரு மாபெரும் ஊக்கமாகும்" எனப் பாராட்டினர்.

PEC-யிலிருந்து OpenAI-யின் உயர் நிர்வாகத்துக்கு சென்ற விஜய் ராஜியின் சாதனை, ஒரு சாதாரண மாணவரும் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இந்திய இளைஞர்களுக்கு இது ஒரு புதிய தொலைநோக்கை காட்டும் ஒளிக்காக விளங்குகிறது.