புதுச்சேரி: புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர், முதல்வர், பங்கேற்ற பழங்குடியினர் தின விழாவில் பழங்குடியின மக்களை தரையில் அமர வைக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது போன்ற நாற்காலியை நாங்கள் பார்த்ததே இல்லை எதற்காக எங்களை தரையில் அமர வைத்தீர்கள் என மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடியின மக்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியினர் தின விழா கம்பன் கலை அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், தலைமை செயலர் ராஜீவ் வர்மா, மாவட்ட ஆட்சியர் வல்லவன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பழங்குடியின மக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். விழா நடைபெற்ற கம்பன் கலை அரங்கில் சுமார் 300 பேர் மட்டுமே அமரக்கூடிய அளவிற்கு நாற்காலிகள் இருந்தது. இதில் அரசு உயர் அதிகாரிகளும் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இருந்ததால் பழங்குடியின மக்கள் 50க்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து விழாவில் கண்டுபிடித்தனர்.


இதற்கு பழங்குடி அமைப்பினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். தங்களுக்கான விழா நடைபெறு கொண்டு இருக்கிறது. மேடையில் தங்களுக்கான இடம் இல்லை. அதேபோல் மேடையில் எதிரே இருக்கும் பொது மக்களின் நாற்காலிகளும் தங்களுக்கு இடம் கொடுக்காமல் தரையில் அமர வைத்து தங்களை அவமானப்படுத்தியதாகவும், தங்களுக்கான விழாவில் தங்களை அவமரியாதை செய்ததாகவும் குற்றம்சாட்டி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


மேலும் கடந்த 15 ஆண்டு காலமாக எங்களது கோரிக்கை தீர்க்கப்படவில்லை, இதனால் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது, இதனை அறிந்த துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சியரை வரவழைத்து அவர்களுக்கு உடனடியாக நாற்காலியை ஏற்பாடு செய்து அமர வையுங்கள் என்றும் உத்தரவிட்டார். அதனை அடுத்து ஆட்சியர் அனைவரையும் சமாதானப்படுத்தி நாற்காலியில் அமர வைத்தார். இதனால் 15 நிமிடம் விழாவில் சலசலப்பு ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.


இதனை அடுத்து விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் மற்றும் முதல்வர் மாவட்ட ஆட்சியர் வல்லவன் மற்றும் துறை இயக்குனர் சாய் இளங்கோவனை அழைத்து விளக்கம் கேட்டு எதற்காக அவர்களை தரையில் அமர வைத்தீர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதனை அடுத்து அவர்களுக்கு மீண்டும் நாற்காலிகள் வழங்கப்பட்டு அமர வைக்கப்பட்டனர். இதனால் விழாவில் பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து விழாவில் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி துணை ஆளுநர் முதலமைச்சரும் சிறப்பித்தனர்.


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர், “பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி தரப்படும். அதேபோல் அவருக்கான மனைபட்டாவும் முதலமைச்சரை உரிய நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் பழங்குடியின நிகழ்ச்சியில் அவர்களை புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர்களை தரையில் அமர்த்தப்பட்டதாகவும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்படி ஒன்றும் அவர்களை மரியாதை குறைவாக நிகழ்ச்சி நடைபெறவில்லை. அதிக அளவில் ஆட்கள் வந்ததால் நாற்காலிகள் இல்லாத காரணமாக கீழே அமர்ந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவர்களுக்கு நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களை அமர வைத்திருக்கிறோம.  இதனால் அவர்களுக்கான நிகழ்ச்சி அவர்களை மேம்படுத்தவே இந்த நிகழ்ச்சி” என்றார்.