கனமழை எதிரொலியொட்டி புதுச்சேரியில் நாளைய தினம் பள்ளி-கல்லூரிகளுக்கு மழை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை:
நேற்றைய தினம் இரவு, ஃபெஞ்சல் புயலானது காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்திற்கு இடையே கரையை கடந்த நிலையில் , புதுச்சேரியில் அதீத கனமழையானது பெய்தது. இது , புதுச்சேரியில் 20 ஆண்டுகால வரலாற்றில் பெய்த அதிகபட்ச மழை என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. ‘இந்த தருணத்தில் , நாளை புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நிலைமை எப்படி உள்ளது?
புதுச்சேரியில் புயல் கரையை கடந்து சென்ற நிலையில், பல்வேறு பகுதிகள் வெள்ளகாடாக மாறியுள்ளன. மேலும், மழை தொடர்ந்து பெயது வருகிறது. நாளையும் மழை பெய்யும் என அறிவிக்க்ப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு பள்ளிக் கூடங்களில் மழையானது தேங்கியிருக்கிறது. இதனால , நாளைய தினம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி தலைமை மின் நிலையம் என தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்த புகைப்படம்
புதுச்சேரி நிலை குறித்து எக்ஸ் பக்கத்தில், பயனர் ஒருவர் பதிவிட்ட வீடியோ.
நிவாரண பணிகளில் புதுவை சபாநாயகர் செல்வம்