Puducherry Power Shutdown: புதுச்சேரி முக்கிய மின்பாதை நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மற்றும் புதுச்சேரி பூமியான்பேட்டையில் உள்ள கீழ்நிலை நீர்தேக்கத்தொட்டி மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை கழுவி சுத்தம் செய்யும் பணி இன்று  16.10.2025 வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று  காலை பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். இதன் காரணமாக நாளை காலை பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

Continues below advertisement

குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் விவரம்:

  • பூமியான்பேட்டை
  • விக்டோரியா நகர்
  • ஜவகர் நகர்
  • பாவாணர் நகர்
  • ஜான்சி நகர்
  • பொன்நகர்
  • சுதாகர் நகர்
  • கல்யாண சுந்தரமூர்த்தி நகர்
  • அன்னை நகர்
  • சரநாராயணா நகர்
  • காவேரி நகர்
  • செல்லபாப்பு நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

 

மின் தடை பகுதிகள்:

புதுவை திருபுவனை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் இண்டஸ்டிரியல்-3 மின் பாதையில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

Continues below advertisement

  • திருபுவனை
  • திருபுவனைபாளையம்
  • மதகடிப்பட்டு
  • நல்லூர்
  •  நல்லூர் குச்சிப்பாளையம்

அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை புதுச்சேரி மின்துறை தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளுக்கு  இன்று  மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம். 

  • துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
  • துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
  • துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
  • துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
  • மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
  • தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
  • பாதுகாப்பு சோதனை
  • இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை