Puducherry Power cut (08.08.2025): புதுச்சேரியில் இன்று மின் தடை.. இந்தப் பகுதியில் எல்லாம் கரண்ட் இருக்காது ?
Puducherry Power cut (08.08.2025): புதுச்சேரியில் இன்று பல்வேறு இடங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 04 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Puducherry Power cut (08.08.2025): புதுச்சேரியில் 08.08.2025 இன்று சொர்ணாவூர் மின்பதை மற்றும் சுற்றுவட்டார மின்பாதை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் (காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை) அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முழுவதும் பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோருக்கு மின் விநியோகம் செய்யும் பணியை புதுவை மின் துறை செய்து வருகிறது. இந்த மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் மின்துறை சுழற்சிமுறையில் மாதாந்திர மின் பாதை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். அத்தகைய சமயங்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும். இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் வெள்ளிக்கிழமை (07.08.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
சொர்ணாவூர் துணை மின் நிலையம்
மின்தடை பகுதிகள் :
- ராம்பாக்கம்
- ஆர்.ஆர்.பாளையம்
- சொர்ணாவூர்
- மேல்பாதி
- சொர்ணாவூர்
- கீழ்பாதி
- கலர்
- வீராணம்
- கொங்கம்பட்டு,
- சொக்கம்பட்டு
- மேட்டுப்பாளையம்
- பரசுரெட்டிப்பாளையம்
- என்.ஆர் பாளையம், ஏ.ஆர் பாளையம்.
- பாக்கம்
- கிருஷ்ணாபுரம்
- துலுக்கநத்தம்
- பூவரசங்குப்பம்
- லட்சுமி கோட்ரஸ்
- பட்டறைபாதி
- சொரப்பூர்
- கலிஞ்சிகுப்பம்
- குச்சிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.
துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
- துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
- துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
- துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
- மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
- தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
- பாதுகாப்பு சோதனை
- இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை





















