புதுச்சேரி: புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் பி.எம். ஸ்ரீ ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில், அடுத்த கல்வியாண்டிற்கான (2026-2027) மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளி முதல்வர் பொ. கண்ணதாசன் வெளியிட்டுள்ளார்.
நவோதயா வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கை
புதுச்சேரி நவோதயா வித்யாலயா பள்ளியில் 9 மற்றும் 11-ம் வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு வரும் பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து புதுச்சேரி ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளி முதல்வர் பொ. கண்ணதாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மத்திய அரசு கல்வித் துறையின் கீழ் புதுச்சேரி பெரிய காலாப்பட்டில் இயங்கி வரும் பி.எம். ஸ்ரீ ஜவகர் நவோதயா பள்ளியில் எதிர் வரும் 2026-2027-ம் கல்வியாண்டில் 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் காலி இடங்களை நிரப்புவதற்கான தெரிவு நிலை தேர்வு வரும் பிப். 7-ஆம் தேதி அன்று காலை 11:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை காலாப்பட்டு பி.எம். ஸ்ரீ ஜவகர் நவோதயா வித்யாலயாவில் நடைபெற உள்ளது.
விண்ணப்பித்த அனைத்து மாணவ மாணவிகள் காலை 9:00 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆன்லைன் மூலம் இதற்காக விண்ணப்பித்து பதிவு செய்த மாணவ மாணவியர்கள் நவோதயா வித்யாலயா சமிதியின் navodaya.gov.in/nvs/en/Home1/ என்கிற இணையதளம் மூலம் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி கொடுத்து தங்களது அனுமதி மற்றும் நுழைவுச் சீட்டினை (Admit Card) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு:
மேலும் விவரங்களுக்கு மற்றும் சந்தேகத்தினை தெளிவு பெற பள்ளியின் தொலைபேசி எண் 0413-2655133 ஐ அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பித்த மாணவர்கள் அல்லது அவர்களது பெற்றோர் நுழைவுச் சீட்டு இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய முடியாத நிலையில், நேரடியாக பள்ளிக்கு வந்து அனுமதி அல்லது நுழைவுச் சீட்டினை பெற்றுக்கொள்ளலாம் என்று அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
