புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்கு விநாயகர் கோயில் யானை இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் புகழ்பெற்ற ஸ்தலம் மணக்குள விநாயகர் ஆலயமாகும். இந்த ஆலயத்தில் உள்ள லெட்சுமி என்ற பெண் யானை உள்ளது. இது கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது.


தந்தத்துடன் கூடிய பெண் யானையாக காட்சி தந்த லெட்சுமி காலில் கொலுசு அணிந்தும் முக்கிய நாட்களில் நெற்றிப்பட்டம் அணிந்தும் காட்சி தந்து இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் அளித்து அனைவரின் அன்பையும் பெற்றுள்ளது. இந்த லெட்சுமி யானை இந்த கோவிலுக்கு கடந்த 1997-ம் ஆண்டு 6 வயதாக இருக்கும்போது கொண்டு வரப்பட்டது.  இந்நிலையில் லெட்சுமி  வழக்கம்போல் காமாட்சி அம்மன் கோயில் வீதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து  சம்பவ இடத்திலே உயிரிழந்தது.






இதனை பார்த்த அவ்வழியே நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள் தகவலறிந்து வந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆழ்ந்த சோகத்தில் அழுது கொண்டிருக்கின்றனர், மேலும் அவர்கள் லட்சுமி யானைக்கு மாலை அனுவித்தும் வருகின்றனர், தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் யானையின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு செய்த பின்னரே யானை இறந்ததற்கான காரணம் தெரிய வரும். லட்சுமி யானை உயிரிழந்த சம்பவம் புதுச்சேரி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






புதுச்சேரியில் உயிரிழந்த லட்சுமி எனும் பெண் கோயில் யானைக்கு, அஞ்சலி செலுத்தினார் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்:


நம் புதுவையில் அருள்மிகு மணக்குள விநாயகரை தொழ வருபவர்களின் தோழியான லட்சுமி யானை இன்று இல்லை என்று நினைத்து வருந்துகிறேன். மணக்குள விநாயகர் திருக்கோவிலுக்கு வருபவர்களிடம் தோழியாக, சகோதரியாக ஆசிர்வாதம் செய்தது இன்னும் மனக்கண்ணில் நிழலாடுகிறது, மணக்குள விநாயகர் தேர் வரும்போது தேர் போன்றே கம்பீரமாக அந்த பிரகாரத்தில் தேரை வழிநடத்தி செல்வாள். எங்களை எப்படி தேற்றிக்கொள்வதே என்று தெரியவில்லை லட்சுமி யானையை இழந்து வாடும் புதுவை மக்களுக்கும், வெளியூரிலிருந்து வந்து அன்போடு பழகியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்