Puducherry Helicopter Ride: இனி எல்லாரும் ஜாலியா ஹெலிகாப்டரில் பறக்கலாம்... இவ்வளவு கம்மி விலையா?
Puducherry Helicopter Ride: சுற்றுலா உப்பளம் எக்ஸ்போ துறைமுகத்தில் துவங்கி, இன்று மற்றும் நாளை காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே நடைபெறுகிறது.

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல் முறையாக அசோசியேஷன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ் புதுச்சேரி மையம் சார்பில் ஹெலிகாப்டர் ஜாய் ரைடு என்ற பெயரில் ஹெலிகாப்டர் சுற்றுலா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஹெலிகாப்டர் சுற்றுலா
உலக அளவில் உள்ள சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் புதுச்சேரி அரசு சுற்றுலா துறையானது பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தரையில் இருந்து கடலின் அழகை ரசித்த வந்த நிலையில் கடலில் இருந்து புதுச்சேரியின் அழகை ரசிக்கும் வகையில் சொகுசு படகு சுற்றுலா திட்டம் கொண்டுவரப்பட்டது.
வானில் பறந்து புதுச்சேரியின் அழகை ரசிக்கலாம்
மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் முத்தாய்ப்பாக தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் வானில் பறந்து கொண்டே புதுச்சேரியின் அழகை ரசிக்கும் வகையில் ஹெலிகாப்டர் இன்ப சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி கலந்து கொண்டு ஹெலிகாப்டர் இன்ப சுற்றுலா பயணத்தை தொடங்கி வைத்தார்.
இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா பயணத்தில் சுமார் 20 நிமிடத்தில் புதுச்சேரியில் அனைத்து பகுதிகளையும் கண்டு ரசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒருவருக்கு 5999 ரூபாய் கட்டணமாக பெறப்படுகிறது.

சொகுசு ஹெலிகாப்டரில் ஆறு பேர் பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டமானது தற்போது மாதத்தில் மூன்று முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது அடுத்து வரும் காலங்களில் தொடர்ந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஹெலிகாப்டர் நிறுவனத்தின் சேர்மன் தெரிவித்தார். புதுச்சேரியை எவ்வளவுதான் சுற்றிப் பார்த்தாலும் வானில் பறந்து கொண்டே புதுச்சேரியின் அழகை ரசிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சுற்றுலா சென்ற பயணி தெரிவித்தார்.
புதுச்சேரியில் முதல் முறையாக அசோசியேஷன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ் (இந்தியா) புதுச்சேரி மையம் சார்பில் 'ஹெலிகாப்டர் ஜாய் ரைடு' என்ற பெயரில் ஹெலிகாப்டர் சுற்றுலா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா உப்பளம் எக்ஸ்போ துறைமுகத்தில் துவங்கி, இன்று மற்றும் நாளை காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே நடைபெறுகிறது.
வானில் 20 நிமிடங்கள் ஹெலிகாப்டரில் பறந்து நகரின் அழகை கழுகு பார்வையில் காணலாம். ஒரு நபருக்கு இந்த சுற்றுலாவிற்கு 5,999 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவிற்கு 77086 22122, 97900-99959 என்ற மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது www.pondychopperride.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

கோவளத்தில் ஹெலிகாப்டர் சவாரி
இதேபோல்., ரூ.6 ஆயிரம் கட்டணத்துடன் கோவளத்தில் ஹெலிகாப்டர் சவாரி தொடங்கப்பட்டுள்ளது. கோவளத்தில் தனியார் நிறுவனம் மூலம் கடந்த 2023-ம் ஆண்டு தீபாவளி அன்று ஹெலிகாப்டர் சவாரி சுற்றுலா தொடங்கப்பட்டது. இதில் நபர் ஒருவருக்கு ரூ.6 ஆயிரம் கட்டணம் செலுத்தி 1,000 அடி உயரத்தில் பறந்து 5 நிமிடத்துக்கு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இயற்கை காட்சிகளை கழுகு பார்வையில் கண்டுகளிக்கும் வகையில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடைபெற்று வருகிறது.
இந்த, ஹெலிகாப்டர் வான்வெளியில் அதிகபட்சமாக 1,000 அடி உயரம் வரை பறந்து செல்கிறது. 5 நிமிடம் முதல் 7 நிமிடம் வரை பயண நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆன்லைனில் 6 ஆயிரம் கட்டணம் செலுத்தி, முன்பதிவு செய்தவர்கள் பலர் ஆர்வமாக கிழக்கு கடற்கரை சாலையில் ஹெலிகாப்டரில் வானில் பறந்து அழகிய கடற்கரை, பக்கிங்காம் கால்வாய், பழைய மாமல்லபுரம் சாலையின் அழுகிய வானுயர்ந்த கட்டிடங்கள் மற்றும் இயற்கை காட்சிகளை கழுகு பார்வையில் வானில் வட்டமடித்தபடியே ஆர்வமாக பார்த்து ரசித்தனர்.
விரைவில் திருநெல்வேலியில் ஹெலிகாப்டர் சுற்றுலா
இதேபோல் திருநெல்வேலியில் ஹெலிகாப்டரில் சுற்றி வரும் சவாரிக்கு தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த பாரத் டைகர் என்ற நிறுவனம், திருநெல்வேலியில் நான்கு நாட்களுக்கு ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
தச்சநல்லுார் அருகே மைதானத்தில் இருந்து கிளம்பி டவுன், நெல்லையப்பர் கோவில் பகுதி, தாமிரபரணி ஆறு என, 10 நிமிடங்கள் சுற்றி அழைத்து வந்து, மீண்டும் மைதானம் வரும். இந்த பயணத்திற்கு ஒரு நபருக்கு, 6,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒருமுறை ஹெலிகாப்டர் பயணத்தில், ஆறு பேர் அழைத்து செல்லப்படுகின்றனர். இதற்காக, திருநெல்வேலி முழுதும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் சுகுமார், இதற்கு அனுமதி வழங்கியுள்ளார். நேற்று ஹெலிகாப்டர் சவாரி துவங்கியது. தினமும் காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, செப்டம்பர் 28 வரை நடந்தது, மீண்டும் துவங்க ஏற்பாடுகள் நடைபெற்று வறுகிறது





















