புதுச்சேரி: நேற்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று நேற்றுமுன்தினம் தவறான தகவலை பரப்பிய ஆட்டோ ஓட்டுநர்களான சின்னையாபுரத்தைச் சேர்ந்த கலைவாணன் மற்றும் ஐஸ்வர்யாராஜ் ஆகிய இருவரை கண்டுபிடித்து இணைய வழி போலீசார் விசாரணை.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை- தவறான தகவலை பரப்பிய ஆட்டோ ஓட்டுநர் கைது
புதுச்சேரியில் லேசாக மழை பெய்தாலும் விடுமுறை எதிர்பார்க்கின்றனர். ஒருபடி மேலேபோய் சமூக வளைதளங்களில் போலியாக விடுமுறை அறிவிப்பினை பள்ளி கல்வித் துறை பெயரில் பக்கவாக எடிட்டிங் செய்து வெளியிட்டு பரப்பி விடுகின்றனர். இது வேகமாக பொதுமக்களை சென்றடைந்து விடுகின்றது. பள்ளி கல்வித் துறை தர்ம சங்கடமான சூழ்நிலை தள்ளப்படுகின்றது. இது தொடர்பாக பள்ளி கல்வித் துறை ஏற்கனவே சைபர் கிரைமில் முறையிட்டுள்ள சூழ்நிலையில், சமூக வளைதளத்தில் போலியாக பள்ளி விடுமுறை அறிவிக்கும் கும்பலை சைபர் கிரைம் போலீசார் தற்போது ஆராய்ந்து வருகின்றனர். இது தொடர்பாக நான்கு பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
அவர்கள் தங்களுக்கு வந்த மெசஜ்யை பார்வேடு செய்ததாக தெரிவித்தனர். அவர்களுக்கு போலி விடுமுறை மெசஜ்யை யார் பார்வேடு செய்தனர் என்று தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. சைபர் எஸ்.பி., பாஸ்கரன் கூறும்போது, பள்ளி விடுமுறை நாட்களை முதல்வர், கல்வி அமைச்சர் பள்ளி கல்வித் துறை முறையாக வெளியிடும். ஆனால் சிலர் போலியாக பள்ளி கல்வித் துறை அதிகாரிகளின் கையெழுத்துகளை போட்டு விடுமுறை அறிவிக்கின்றனர். இது சட்டப்படி தவறு. இது போன்று யாராவது செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கன மழையின் எதிரொலியாக 12.12.2024 அன்று புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக நேற்றுமுன்தினம் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் பெயரில் அறிவிப்பு வெளியானது. திடீரென அந்த அறிவிப்பு டெலிட் செய்யப்பட்டது. அரைமணி நேரத்திற்கு பிறகு மீண்டும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் பெயரில் புதிய விடுமுறை அறிவிப்பு வெளியானது. இது தான் உண்மையான அறிவிப்பு.
இந்த விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் அமைச்சர் நமச்சிவாயம் புகார் கொடுத்ததை தொடர்ந்து, இப்போது சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். தவறான தகவலை பரப்பிய ஆட்டோ ஓட்டுநர்களான சின்னையாபுரத்தைச் சேர்ந்த கலைவாணன் மற்றும் ஐஸ்வர்யாராஜ் ஆகிய இருவரை கண்டுபிடித்து இணைய வழி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசில் பொதுமக்களிடம் தங்களின் வருத்தத்தையும், மன்னிப்பையும் கேட்ட வீடியோ
நேற்று 12.12.24 புதுச்சேரி அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்காததற்கு முன்பே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று பொய்யான செய்தியை WhatsApp மூலம் இணையதளத்தில் பரப்பிய ஆட்டோ ஓட்டுநர்களான புதுச்சேரி சின்னையாபுரத்தை சேர்ந்த ஐஸ்வர்யா ராஜ் மற்றும் கலைவாணன் ஆகியோர்கள் போலீசில் பொதுமக்களிடம் தங்களின் வருத்தத்தையும், மன்னிப்பையும் கேட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
இதேபோல், நேற்று மாலை விழுப்புரம் செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது போல் குறுஞ்செய்தியை பரப்பினர். இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை இருக்கும் என மாவட்ட ஆட்சியர் எச்ரிதுள்ளர்.