இளம் பெண் குளிப்பதை எட்டிப்பார்த்த புதுமாப்பிள்ளை கொடூரக் கொலை: புதுச்சேரியில் பதற்றம்!
புதுச்சேரி பாகூர் அடுத்த பனையடிக்குப்பம் பகுதியில் எதிர்வீட்டு இளம்பெண் குளிப்பதை எட்டிப்பார்த்ததால் பெண்ணின் உறவினர் தாக்கியதில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு.

புதுச்சேரி: புதுச்சேரி பாகூர் அடுத்த பனையடிக்குப்பம் பகுதியில் எதிர்வீட்டு இளம்பெண் குளிப்பதை எட்டிப்பார்த்ததால் தாக்கப்பட்ட புதுமாப்பிள்ளை மரணம், புதுமாப்பிள்ளையான ராஜகுரு கொல்லப்பட்ட சம்பவம் காரணமாக பனையடிகுப்பம் பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
இளம்பெண் குளிப்பதை எட்டிப்பார்த்த புதுமாப்பிள்ளை
புதுச்சேரி பாகூர் அருகே பனையடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகுரு (வயது 34). இவருக்கு கடந்த மூன்று மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் ராஜகுரு கடந்த சில நாட்களுக்கு எதிர்வீட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் குளிப்பதை மாடியில் இருந்து எட்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்தப் பெண்ணின் கணவர் ராஜகுருவிடம் தட்டிக்கேட்டதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி பனையடிகுப்பத்தில் உள்ள தனது நண்பர் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான மீன்குட்டையில் உள்ள கொட்டகையில் ராஜகுரு படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பெண்ணின் உறவினர் தினேஷ் பாபு மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ராஜகுருவை கட்டி எழுப்பி, அங்கு கிடந்த பிளாஸ்டிக் நாற்காலி மற்றும் தடியால் அவரை அடித்து தாக்கினர். அவர்கள் தாக்கியத்தில் ராஜகுரு படுகாயம் அடைந்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். ராஜகுருவை மீட்ட அக்கம் பக்கத்தினர் மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் ராஜகுரு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பதட்டமான சூழல்
இந்த மோசமான தாக்குதலில் காயமடைந்த ராஜகுரு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜகுரு பரிதாபமாக இறந்தார். குறித்து அவரது அண்ணன் கதிரவன் கரையாம்புத்தூர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தினேஷ்பாபு (27) மற்றும் அவரது நண்பர்கள் சர்மா (24), முகிலன் (20), கரையாம்புத்தூர் சுமித் (20), அச்சுதன் (24) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுமாப்பிள்ளையான ராஜகுரு கொல்லப்பட்ட சம்பவம் காரணமாக பனையடிகுப்பம் பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.





















