மேலும் அறிய

கார்ப்பரேட் சதி... முடக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம்! - புதுச்சேரி அதிகாரிகள் மீது அதிமுக அன்பழகன் பாய்ச்சல் !

சுற்றுலாப் படகுகளை முடக்கி கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கச் சதி: அதிமுக செயலாளர் அன்பழகன் கடும் குற்றச்சாட்டு!

புதுச்சேரி: புதுச்சேரியில் படகு விபத்தைக் காரணம் காட்டி ஒட்டுமொத்தப் படகுப் போக்குவரத்தையும் முடக்கி வைத்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்க அதிகாரிகள் சதி செய்வதாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது., 

புதுச்சேரியில் படகுகளை இயக்குவதில் கடற்கரை காவல்துறை போலீஸ் மற்றும் சுற்றுலாத் துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து திட்டமிட்டு அரசுக்கு அவ பெயரை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

‌‌சுற்றுலா படகுகளை இயக்க தீயணைப்பு துறை, தேசிய நீர் பாதுகாப்பு துறை, துறைமுக கடற்கரை போலிஸ் பாதுகாப்பு துறை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட துறைகளில் ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டும், 

இந்த அனுமதி வழங்கும்போது முதலமைச்சர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் தலைமை செயலர் வரை அனுமதியை பெற்று இறுதியாக சுற்றுலா படகுகளை இயக்க சுற்றுலாத்துறை அனுமதி வழங்கும்.

புதுச்சேரியில் 80-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் 800-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர், ஆனால் இருக்கும் அதிகாரிகள் இந்தத் திட்டத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்து மீனவர்களை, வஞ்சிக்கும் வகையில் சதி செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

படகுகளை இயக்க ஆண்டுக்கு ஒரு முறை உரிமம் வழங்கப்பட்டு வருகிறது ஆனால் ஒரு சிலர் உரிமம் முடிந்தும் ஆறு மாதம் வரை மீண்டும் உரிமத்தை புதுப்பிக்க ஆடல் கடற்கரை காவல் துறை அலைக்கழிக்கிறது. ஒரு நிறுவனத்திற்கு இரண்டு மூன்று படகுகள் வைத்திருக்கலாம் என அரசு கொள்கை முடிவெடுத்து  முதலமைச்சர் அவர்கள் அவ்வாறு அனுமதித்து உள்ளார்.

ஆனால் தற்பொழுது அரசின் அனுமதியை காலில் போட்டு மிதிக்கின்ற விதத்தில் கடற்கரை பாதுகாப்பு அதிகாரி அவர்கள் ஒரு நிறுவனத்திற்கு ஒரு படகுக்கு மட்டுமே அனுமதி வழங்க முடியும் என மீனவர்களை அலைக்கழிக்கின்றார். மேலும் மீனவர்கள் மீது உள்ளூரில் எந்த ஒரு சிறு வழக்கும் இருக்கக் கூடாது என ஊரு படகுகளை ரினுவல் செய்யாமலேயே உள்ளார்.

இதனை பயன்படுத்தி கொண்டு இங்குள்ள மீனவர்கள் உரிமம் பெறாமலே படகுகளை இயக்குகின்றனர்.இது போன்ற கவனக்குறைவாலே படகு விபத்து ஏற்பட்டுள்ளது. சுற்றுலா துறையின் அனுமதி பெறாமலேயே 50க்கும் மேற்பட்ட படகுகள் வம்பாகீரபாளையம், வீராம்பட்டினம் ஆகிய பகுதியில் இருந்து இயங்கி வந்துள்ளது. இது சம்பந்தமாக சுற்றுலா துறையிலும், கடற்கரை காவல்துறையிலும், பலமுறை முறையிட்டும் இவ்விரண்டு துறை அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதுவே இந்த விபத்து ஏற்பட காரணமான ஒன்றாகும்.

எந்தப் படகு விபத்து ஏற்பட்டதோ அதை மட்டுமே தடை செய்ய வேண்டும்.ஆனால் ஒட்டுமொத்தமாக படகுகளை முடக்கி தொழில் செய்ய விடாமல் தடுப்பது என்பது கண்டிக்கத்தக்கது. புதுச்சேரி போக்குவரத்து துறையில் ஏதாவது ஒரு பேருந்து விபத்தில் ஏற்படுத்தினால் ஒட்டுமொத்த அனைத்து பேருந்துகளையும் ஓட விடாமல் அரசு தடை செய்து விடுமா ? ஒரு படகு விபத்து ஏற்படுத்தியதை மையப்படுத்தி அனைத்து படகுகளையும் அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக படகு சவாரிகளை முடக்கி விட்டு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் சதி செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையெல்லாம் கண்டு கொள்ள வேண்டிய சுற்றுலாத்துறை அமைச்சர் வாய் மூடி மௌனமாக இருக்கிறார் அவருடைய கட்டுப்பாட்டில் தான் சுற்றுலாத்துறை இயங்குகிறதா என்ற கேள்வி எழுகிறது. நாளைய தினமே அரசு அதிகாரிகளின் தவறான செயலால் நிறுத்தப்பட்டுள்ள சுற்றுலா படகு போக்குவரத்தை மீண்டும் அனுமதிக்க வேண்டும் இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்,

தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில்அதிமுக தலைமையில் உள்ளது. அந்த கூட்டணி புதுச்சேரியிலும் தொடரும். கூட்டணி குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் முடிவு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி: எதிர்பாராத தரிசனம்.. பாதுகாப்பு, மரியாதை, சுவாரசியம் என்ன?
திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி: எதிர்பாராத தரிசனம்.. பாதுகாப்பு, மரியாதை, சுவாரசியம் என்ன?
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
சென்னை - புதுச்சேரி பயணம் இனி 2 மணிநேரம் மட்டுமே: போக்குவரத்துப் புரட்சியை விளக்கிய பிரதமர்
சென்னை - புதுச்சேரி பயணம் இனி 2 மணிநேரம் மட்டுமே: போக்குவரத்துப் புரட்சியை விளக்கிய பிரதமர்
நீண்ட கால வலி...: பிரதமர் முன் ரங்கசாமி வைத்த முக்கிய கோரிக்கை! எதிர்பார்ப்பில் புதுச்சேரி மக்கள்...
நீண்ட கால வலி...: பிரதமர் முன் ரங்கசாமி வைத்த முக்கிய கோரிக்கை! எதிர்பார்ப்பில் புதுச்சேரி மக்கள்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs WI: தடுமாறிய இந்திய பவுலிங்! பொளந்து கட்டிய பவல்-ஹோல்டர்.. ரெக்கார்ட் சேஸ் செய்வார்களா சூர்யா படை
IND Vs WI: தடுமாறிய இந்திய பவுலிங்! பொளந்து கட்டிய பவல்-ஹோல்டர்.. ரெக்கார்ட் சேஸ் செய்வார்களா சூர்யா படை
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
Embed widget