புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தின விழா காமராஜர் மணிபண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து நல்லாசிரியர் விருதுக்கு அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தனர்.


நிகழ்ச்சி தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்,


சனாதனம் குறித்து உதயநிதி தவறாக பேசிவிட்டு மீண்டும் மீண்டும் அதையே பேசி வருகிறார். நம் சொந்தங்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டபோது இவர்கள் என்ன செய்தார்கள். அப்போது ஆட்சியில் இருந்தவர்களுடன் கைகோர்த்து கொண்டு அமைதியாக இருந்தனர். பெரும்பான்மையான மக்களின் மனதை புண்படுத்த வேண்டாம். சனாதனம் என்பது கேஸ்டிசம்னு கொண்டு செல்கின்றனர். இது தர்மத்தின் படி ஒரு வாழ்வியல். இதை புரிந்துகொள்ள வேண்டும். ஏதோ விளையாட்டாக பேசுவது போல் உதயநிதி பேசுறார். உங்களுக்கு விளையாட்டாக இருக்கலாம்.


அதை பின்பற்றுபவர்களுக்கு விளையாட்டு இல்லை. பாரத தேசம் என்பதில் நாம் பெருமை கொள்வோம். கேரளாவை கேரளம் என்றும், பம்பாய் மும்பை என்றும், மெட்ராஸ் என்பதை சென்னை என பெயர் மாற்றியுள்ளனர். அதே போல் இந்தியாவை பாரத தேசம் என்பதை பெருமைகொள்வோம். பாரத தேசம் என அழைப்பதை மகிழ்ச்சிகொள்கிறேன். ஆங்கிலேயர்களின் சாயல்கள் எங்கெல்லாம் உள்ளதோ அதனை நீக்கி கொண்டிருக்கிறேன் என பிரதமர் கூறியுள்ளார். அதனை தற்போது நடைமுனைப்படுத்தி வருகிறார் என்றார்.