மேலும் அறிய

தொடரும் போராட்டம்; சத்துணவு பணியாளர்களின் 13 அம்ச கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தல்

சத்துணவுப் பணியாளர்களின் போராட்டம் மாநிலம் முழுவதும் மாணவர்களிடமும், அடித்தட்டு மக்களிடமும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது- அன்புமணி.

அடக்குமுறை கூடாது: ரூ.6750 ஓய்வூதியம் உள்ளிட்ட சத்துணவு பணியாளர்களின் 13 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’ஓய்வூதியம் உயர்வு, பணிக்கொடை அதிகரிப்பு, முழு நேர அரசு ஊழியர்களுக்கான காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் கூட்டமைப்பினர் தொடர்ந்து ஐந்தாம் நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அரசு, அவர்களை கைது செய்து ஒடுக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது.

கோரிக்கைகள் என்னென்ன?

பகுதி நேர நிரந்தரப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு முறையே ரூ.7,700, ரூ.4100, ரூ.3000 அடிப்படை ஊதியத்தில் பணியாற்றி வரும் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் ஆகியோரை  முழுநேர நிரந்தரப் பணியாளர்களாக அறிவித்து காலமுறை  ஊதியம் வழங்க வேண்டும்; மாதம் ரூ.2000 மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்படும் நிலையில் அதை ரூ.6750 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்; காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையல் பணியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வீதம் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 கோரிக்கைகளை சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ஜனவரி 20ஆம் தேதி மாநிலம் முழுவதும் சத்துணவுப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று திமுக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து சத்துணவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

ஆனால், தமிழக சட்டப்பேரவையில் கடந்த 24ஆம் தேதி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சத்துணவு ஊழியர்களின் ஓய்வூதியம் ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ. 3,400 ஆகவும், பணிக்கொடை ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாகவும் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

இன்று வரை பேச்சு நடத்தவில்லை

தங்களின் கோரிக்கை மற்றும் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை விட குறைந்த ஓய்வூதியமும், பணிக்கொடையும் அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தங்களின் 13 கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 3ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களுடன் அரசு இன்று வரை பேச்சு நடத்தவில்லை. மாறாக போராடும் பணியாளர்களை கைது செய்து அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறது.

செங்கல்பட்டு பகுதியில் போராட்டம் நடத்தி வரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை நேற்று நான் நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன். அவர்கள் கூறிய பல தகவல்கள் கண்ணீரை வரவழைப்பதாக இருந்தன. 30 ஆண்டுகளாக பணியாற்றும் சத்துணவு பணியாளர்களுக்குக் கூட இன்னும் கண்ணியமான  வாழ்க்கை நடத்துவதற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்று அவர்கள் என்னிடம் வேதனையுடன்  தெரிவித்தனர். விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்து விட்ட நிலையில், ரூ.7,700 அடிப்படை ஊதியத்தை வைத்துக் கொண்டு ஒருவரால் எவ்வாறு குடும்பம் நடத்த முடியும்? 30 ஆண்டுகள் பணியாற்றி  ஓய்வு பெறும் சத்துணவுப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.3400 ஓய்வூதிடம் எந்த வகையில் போதுமானது? என்ற அவர்களின் நியாயமான வினாக்களை திமுக அரசு மனித நேயத்துடன் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

ஐந்தாம் நாளாக முடக்கம்


இன்னொருபுறம் சத்துணவுப் பணியாளர்களின் போராட்டம் மாநிலம் முழுவதும் மாணவர்களிடமும், அடித்தட்டு மக்களிடமும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 43,038 சத்துணவு மையங்களில் இப்போதைய நிலையில் 71,000 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், 43 ஆயிரம் சத்துணவு மையங்களும் ஐந்தாம் நாளாக முடங்கிக் கிடப்பதாக கூறப்படுகிறது; அதனால், அந்த மையங்களை நம்பியுள்ள 40.82 லட்சம் மாணவர்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும், குறிப்பாக சத்துணவுத் திட்டப் பயனாளிகளாக சேர்ந்திருக்கும் குழந்தைகள்  ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். சத்துணவுத் திட்டத்தை நம்பியுள்ள அவர்களுக்கு உணவு கிடைக்காதது அவர்களின் கல்வியையும், உடல்நலத்தையும் கடுமையாக பாதிக்கும்.

எனவே, உரிமை கேட்டுப் போராடும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதை கைவிட்டு, அவர்களுடன் அரசு உடனடியாக  பேச்சு நடத்த வேண்டும். காலமுறை ஊதியம், ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பத்திரப் பதிவில் இந்த தவறுகள் இருந்தா பெரிய சிக்கல் !! கவனமா இருங்க !!
பத்திரப் பதிவில் இந்த தவறுகள் இருந்தா பெரிய சிக்கல் !! கவனமா இருங்க !!
புதிய வீடு கட்ட போறீங்களா ? அஸ்திவாரம் போடும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க !!
புதிய வீடு கட்ட போறீங்களா ? அஸ்திவாரம் போடும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க !!
கள்ளக் காதலனுடன் உல்லாசம் !! கூலி தொழிலாளியால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கள்ளக் காதலனுடன் உல்லாசம் !! கூலி தொழிலாளியால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறு !! பலத்த சத்தத்துடன் விழுந்த பாட்டில்கள் !! நடந்தது என்ன ?
பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறு !! பலத்த சத்தத்துடன் விழுந்த பாட்டில்கள் !! நடந்தது என்ன ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
Erode DMK : ’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?
’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?
IND vs NZ Final: ராசியில்லாத அகமதாபாத்... 2023 உலகக்கோப்பை வடுவை இந்தியா துடைக்குமா?
IND vs NZ Final: ராசியில்லாத அகமதாபாத்... 2023 உலகக்கோப்பை வடுவை இந்தியா துடைக்குமா?
UPSC Toppers List: யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
வண்டலூர் பூங்காவில் 21 வருடங்களுக்குப் பிறகு சிறுத்தை பூனைகள்! விலங்கு பரிமாற்றத்தில் புதிய திருப்பம்!
வண்டலூர் பூங்காவில் 21 வருடங்களுக்குப் பிறகு சிறுத்தை பூனைகள்! விலங்கு பரிமாற்றத்தில் புதிய திருப்பம்!
Chief Minister Stalin 14 announcements : 7 லட்சம் வீடுகள், வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீடு.! அசத்தலான 14 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
7 லட்சம் புதிய வீடுகள், வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீடு.! அசத்தலான 14 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
Embed widget