பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதுடன், ராமேஸ்வரம் முதல் தாம்பரம் வரையிலான பாம்பன் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்ட புதிய தினசரி ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார.
புதிய பாம்பன் ரயில் பாலம்
இந்தியாவின் முதல் செங்குத்தாக திறக்கும் புதிய பாம்பன் பாலம் ரயில்வே பொறியியல் துறைக்கு ஒரு மைல் கல் ஆகும். புதுமையான நவீனமயமாக வடிவமைக்கப்பட்ட மேல் நோக்கி செங்குத்தாக திறக்கும் ரயில் பாலம் சிறிய, பெரிய கப்பல் போக்குவரத்திற்கு பெரிய வகையில் உதவி புரியும். பாலத்தின் தூண்கள் கடல் பரப்பின் அடி ஆழத்தில் ஊன்றப்பட்ட பெரிய இரும்பு குழாய்களில் வலுவூட்டப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் மூலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் தூண்களின் மேலே பொருத்தப்பட்டுள்ள கிர்டர்கள் துருப்பிடிக்காத இரும்பால் உருவாக்கப்பட்டவை. உலக அளவில் அதிக துருப்பிடிக்கும் சூழலை கொண்ட பாம்பன் பகுதியில் புதிய பாலம் கட்ட பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திரமோடி.
பாம்பன் புதிய ரயில் பாலம் திறந்து வைப்பு
ராமநவமி நாளான இன்று பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதுடன், ராமேஸ்வரம் முதல் தாம்பரம் வரையிலான பாம்பன் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்ட புதிய தினசரி ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் 8,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரயில் மற்று சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமான பாம்பன் ரயில் பால திட்டம் 550 கோடி ரூபாயில் 2.08 கிலோ மீட்டர் நீளமும், கடல் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரமும், 333 கான்கீரிட் அடித்தளம், 101 தூண்கள், 99 இடைவெளி இணைப்புகள், 72.5 மீட்டர் செங்குத்து லிப்ட், இது 17 மீட்டர் உயரம் வரை உயரும் வகையில் நடுப்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புமிக்க புதிய பாம்பன் பாலத்தை இன்று பிரதமர் நரேந்திரமோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பலத்த பாதுகாப்பு
பிரதமரின் வருகையினை முன்னிட்டு தீவு முழுவதும் பலத்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மண்டபம் முகாமில் இருந்து ராமேஸ்வரம் வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் தீவு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல கடந்த 4ம் தேதி முதல் இன்று வரை 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாம்பன், ராமேஸ்வரம் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் அனைத்தும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நங்கூரமிடப்பட்டுள்ளன. பிரதமர் நிகழ்வையொட்டி கடலில் இந்திய கடலோர காவல்படைக்கு படைக்கு ரோந்து கப்பல்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சினிமா மாணவனாக இருந்தேன் இப்போது மார்க்சிஸ்ட் மாணவனாக உள்ளேன் - வெற்றிமாறன் நெகிழ்ச்சி