PM Modi: கன்னியாகுமரி முக்கடல் சந்திக்கும் விவேகானந்தர் பாறையில் சுமார் 45 மணி நேரம் தியானத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, தியானத்தை நிறைவு செய்தார்.
இதையடுத்து, அருகில் உள்ள திருவள்ளூர் சிலையை பார்வையிட்டு, திருவள்ளுவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிரதமர் தியான நிகழ்வு:
பொதுத்தேர்தல் நடைபெறும் ஒவ்வொருமுறையும் புன்னிய ஸ்தலங்களுக்கு சென்று, தியானத்தில் ஈடுபடுவதை மோடி வாடிக்கையாக கொண்டுள்ளார். முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததும், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிரதாப்கர் கோட்டையிலும், 2019-ம் ஆண்டு இமயமலையில் உள்ள கேதார்நாத் குகையிலும் தியானம் மேற்கொண்டார்.
அவ்வகையில் நடப்பாண்டில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் நிறைவடையும் நிலையில், இந்த முறையும் தியானம் செய்ய முடிவு செய்தார். இதற்காக கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை, மோடி தேர்வு செய்த மோடி கடந்த 45 மணி நேரம் தியானம் மேற்கொண்டார்.
தியானத்தை நிறைவு செய்த பிரதமர்:
இந்நிலையில் இன்று, தற்போது தியானத்தை நிறைவு செய்தார். பின்னர், அருகில் உள்ள திருவள்ளுவர் சிலைக்குச் சென்று பார்வையிட்டார். அப்போது திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவியும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்.
பின்னர் , அங்கிருந்து சுற்றி இருக்கும் முக்கடல் சந்திக்கும் கடலை சில நிமிடங்கள் ரசித்தார். இதையடுத்து, திருவள்ளுவர் சிலை இருக்கும் இடத்திலிருந்து, கரையை நோக்கி படகில் புறப்பட்டார். கரையை வந்தடைந்த பிறகு, அங்கிருந்து வாகனத்தில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.
அடுத்த பயணம்:
- அங்கிருந்து காரில் ஏறி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு வருகிறார்.
- பிறகு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்.
- மாலை 4.05 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும் அவர் 4.10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.
- இரவு 7.30 மணிக்கு டெல்லியை சென்றடைகிறார் என்று தகவல் தெரிவிக்கின்றன.
இன்று மாலையுடன் 18வது மக்களவைக்கான தேர்தல் நிறைவடைகின்ற நிலையில், பிரதமர் மோடியின் பயணத்தை, தேர்தலோடு எதிர்க்கட்சிகள் தொடர்புபடுத்தி விமர்சனம் வைத்து வருகின்றன. இந்நிலையில், பிரதமர் மோடியின் பயணமானது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.