(Source: Poll of Polls)
இம்மாத இறுதியில் தமிழகம் வரும் பிரதமர் மோடி, அமித்ஷா! – எதற்கு தெரியுமா? கசிந்த தகவல்!
ஏற்கெனவே பல முறை திட்டமிடப்பட்டு தேதிகள் ஒத்திவைக்கப்பட்டன. பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் ஒரு காரணமாக சொல்லப்பட்டது.

பிப்ரவரி 28ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். பாம்பன் புதிய பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் உறுதி செய்திருக்கிறது.
ஏற்கெனவே பல முறை திட்டமிடப்பட்டு தேதிகள் ஒத்திவைக்கப்பட்டன. பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. தற்போது பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியுள்ளார்.
இந்நிலையில், பிப்ரவரி 28ஆம் தேதி பிரதமர் மோடி பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. பாம்பன் பாலம் திறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 28ஆம் தேதி ராமநாதபுரம் வந்து பாம்பன் பாலத்தை திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொள்வார்கள், நேரம் என்ன என்பது குறித்த இறுதி பணிகள் எல்லாம் நடைபெற்று கொண்டிருக்கின்றன. பிரதமர் அலுவலகம் மற்றும் ரயில்வே துறை இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதற்கு முன்னதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர உள்ளார். அதாவது பிப்ரவரி 26ஆம் தேதி அவர் தமிழ்நாடு வருகிறார். அன்று ராமநாதபுரம் வரும் அமித்ஷா அங்கு புதிய பாஜக அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
ராமநாதபுர பயணத்தை முடித்துக்கொண்டு அவர் கோவை செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இந்த மாத இறுதியில் ஒரே நேரத்தில் இருவரும் தமிழகம் வரும் சூழல் இப்போது ஏற்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோ தமிழகம் வருவது தமிழக பாஜகவினரிடையே இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.
முன்னதாக பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். அங்கு வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்து பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் ஆலோசனை நடத்தினர். மேலும் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதைத்தொடர்ந்து இன்று அமெரிக்காவில் இருந்து பிரதமர் மோடி இந்தியா திரும்பியுள்ளார்.





















