Tomato And Onion Price: மூட்டை மூட்டையாக குவிந்த வெங்காயம்.! கொட்டிக்கிடக்கும் தக்காளி.! ஒரு கிலோ இவ்வளவு தானா.?
காய்கறிகள் தான் சமையலுக்கு முக்கிய தேவையானதாக இருக்கும். இந்த நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக உயர்ந்திருந்த தக்காளி மற்றும் பச்சை காய்கறிகளின் விலையானது தற்போது சற்று குறைந்துள்ளது.

உச்சத்தை தொட்ட தக்காளி விலை
சமையலுக்கு முக்கிய தேவையாக இருப்பது காய்கறிகள், அதிலும் தக்காளி வெங்காயம் தான் சமையலுக்கு ருசியைக் கொடுக்கும். எனவே காய்கறிகள் சந்தையில் எந்த காய்கறிகளை மக்கள் வாங்குகிறார்களோ இல்லையோ கட்டாயம் தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்குவார்கள். ஆனால் கடந்த சில வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தக்காளி விலையானது உச்சத்தை தொட்டது. ஒரு கிலோ 70 முதல் 80 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மாத பட்ஜெட்டில் தக்காளி வாங்குவதற்கு என கூடுதல் பணம் ஒதுக்க வேண்டிய கட்டாயமும் உருவானது. இந்தநிலையில் மழை ஓய்ந்திருக்கும் நிலையில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலையானது சற்று குறைந்துள்ளது.
தக்காளி, வெங்காயம் விலை என்ன.?
தக்காளி ஒரு கிலோ 35 முதல் 50 ரூபாய்க்கு தரத்தை பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் வரும் நாட்களில் இன்னும் தக்காளி விலை குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதே போல இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில்,வெங்காயத்தின் விலையானது சரிந்துள்ளது. காய்கறி சந்தையில் மூட்டை மூட்டையாக வெங்காயம் குவிந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 15 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 100 ரூபாய்க்கு 6 கிலோ வெங்காயத்தை வியாபாரிகள் கூவி,கூவி விற்பனை செய்து வருகிறார்கள்.
காய்கறிகள் விலை என்ன.?
இந்தநிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பச்சை காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது. உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 முதல் 45 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 35 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உயர்ந்த முருங்கைக்காய் விலை
கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,பீன்ஸ் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.





















