சமையலும் காய்கறிகளும்

சமையல் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது காய்கறிகள் தான், அதிலும் தக்காளி, வெங்காயம் தான் ரசம் வைப்பது முதல் பிரியாணி சமைப்பது வரை அனைத்திற்கும் முக்கிய தேவையாக உள்ளது. எனவே காய்கறி சந்தையில் எந்த காய்கறிகளை இல்லத்தரசிகள் வாங்குகிறார்களோ இல்லையோ கண்டிப்பாக தக்காளி மற்றும் வெங்காயத்தை மட்டும் மறக்காமல் வாங்குவார்கள். அந்த அளவிற்கு முக்கிய தேவையான தக்காளி விலை உயர்ந்தால் இல்லத்தரசிகளின் நிலை அதோ கதி தான். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தக்காளி விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென புதிய உச்சத்தை தொட்டது.ஒரு கிலோ 70 முதல் 80 ரூபாய்க்கு விற்பனையானது.

Continues below advertisement

ஏறி இறங்கும் தக்காளி விலை

இதன் காரணமாக 4 கிலோ, 5 கிலோ என தக்காளியை வாங்கிச் சென்ற இல்லத்தரசிகள் ஒரு கிலோ வாங்குவதற்கு மிகவும் சிரமம் அடைந்தனர். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களிலும் மழை கொட்டியது. தற்போது மழை பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு லாரி லாரியாக தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 75 ரூபாய்க்கு வரை விற்பனையான தக்காளி விலையானது தற்போது 25 முதல் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல வெங்காயத்தின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 20 முதல் 30 ரூபாய்க்கு தரத்தை பொறுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தக்காளி மற்றும் வெங்காயத்தை இல்லத்தரசிகள் அதிகளவில் வாங்கி வருகின்றனர்.

பச்சை காய்கறிகள் விலை

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உயர்ந்திருந்த பச்சை காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது. பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Continues below advertisement

 குறையும் காய்கறி விலை

முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 250 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.