Prabhakaran Alive Claim LIVE: “பிரபாகரன் உயிருடன் இல்லை: எங்களிடம் ஆதாரம் இருக்கு” - இலங்கை ராணுவம் திட்டவட்டம்
Prabhakaran Alive Claim LIVE Updates: பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது தொடர்பாக, இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி ABP நாடுவிற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். இதுதொடர்பாக தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு கேள்வி எழுப்பியபோது, பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியான பேட்டிகள் தொடர்பாக உரிய தகவல் கிடைத்த பிறகு பதில் தரப்படும் என, இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவிவித்துள்ளார்.
கண்டிப்பாக அவர் உயிருடன் இல்லை என இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி பழ.நெடுமாறனின் கருத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
2009ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி பிரபாகரனை இறுதிகட்ட யுத்தத்தில் கொன்றதற்கான ஆதாரங்கள் தம்வசம் உள்ளது என இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.
Background
Prabhakaran Alive Claim LIVE Updates:
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும், இது பிரபாகரன் குடும்பத்தினர் தெரிவித்த தகவல் என்றும் அவர் விரைவில் வெளியே வருவார் என்றும் கூறியுள்ளார். பிரபாகரன் குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, ”சர்வதேச அரசியல் சூழலும், இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்த வெடித்துச் சிதறியுள்ள சிங்கள மக்களின் போராட்டமும், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை தற்போது உருவாகியுள்ளது. இந்த சூழலில் தமிழீழ தலைவர் நலமுடன் இருக்கிறார் என்பதை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், அவர் “ இது பிரபாகரன் குடும்பத்தினர் தெரிவித்த தகவல் என்றும் அவர் விரைவில் வெளியே வருவார். பிரபாகரன் குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர். பிரபாகரன் உள்ள இடத்தை தற்போது கூற முடியாது. பிரபாகரனின் அனுமதியுடன் இதனை வெளிப்படுத்துகிறேன் என்றும்” அவர் கூறியுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -