தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளைய தினம் (24.12.2025) புதன்கிழமை அன்று வழக்கமான மாதாந்திர மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக பின் வரும் பகுதிகளில் பகல் மணிநேர மின் தடை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.  அதன் முழு விபரம் மாவட்ட வாரியாக பார்க்கலாம்.

Continues below advertisement

மின் தடை பகுதிகள்:

கோவை மாவட்டத்தில் கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம், யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜி.சி.டி.நகர், கணுவாய், கே.என்.ஜி.புதூர், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் ரோடு, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, குனியமுத்தூர், சுந்தரபுரம், கோவைப்புதூர், புட்டுவிக்கி பகுதி ஆகிய இடங்கள்.

Continues below advertisement

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி ஆகிய இடங்கள்.சேலம் மாவட்டத்தில் தோப்பூர், சேகரப்பட்டி, காமம்பட்டி, எருமப்பட்டி, வெள்ளார், சோழியனூர், தீவட்டிப்பட்டி, மூக்கனூர், இலத்தூர், ஜோடுகுளி, குண்டுகால், தளவாய்பட்டி, கொண்டரெட்டியூர் ஆகிய இடங்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தொட்டிபாளையம், கொடுவாய், வினோபா நகர், தெற்கு அவினாசிபாளையம், அண்ணாநகர், சேரன்நகர், தண்ணீர்பந்தல், கரைவலசு ஆகிய இடங்கள்.விழுப்புரம் மாவட்டத்தில் தாயனூர், மேல்மலையனூர், தேவனூர், மணந்தல், வடபாலை, ஈயங்குணம், கொடுக்கன்குப்பம், மேல்செவலபாடி, நாராயணமங்கலம், மேல்வைலாமூர், வளத்தி, அன்னமங்கலம், நீலம்பூண்டி, சித்திப்பட்டு, அத்திப்பட்டு, வேலந்தாங்கல் ஆகிய இடங்கள்.

மின் தடை முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் 

* மின் தடை அமலுக்கு வரும் முன் மொபைல், பவர் பேங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளவும்.

* மின்சார பம்புகள் இயங்காது என்பதால் குடிநீர் மற்றும் வீட்டு நீரை போதுமான அளவில் சேமித்து வைத்திருக்கவும்.

* மின் விநியோகம் மீண்டும் தொடங்கும்போது சேதம் ஏற்படாமல் இருக்க அனைத்து மின்சாதனங்களையும் அணைத்துவிடவும்.

* மெழுகுவர்த்தி, டார்ச் அல்லது பேட்டரி விளக்குகளை தயார் நிலையில் வைத்திருக்கவும்.

* மருத்துவ உபகரணங்கள் மற்றும் குளிர்விப்பு தேவைப்படும் மருந்துகளுக்கான மாற்று ஏற்பாடுகளை முன்னதாக செய்து கொள்ளவும்.

* மின் தடை நேரத்தில் லிஃப்ட் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

* அன்றாட வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, மின்சாரம் திரும்பும் வரை ஒத்துழைப்பு வழங்கவும்.