நாளை மறுநாள் மின் தடை: திண்டுக்கல், தேனி, உடுமலைப்பேட்டை பகுதிகளில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு.
பிப்ரவரி 23ம் தேதி நாளை மறு நாளன்று திங்கள் கிழமை தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
நமது முன்னோர்கள் காலத்தில் மின்சாரம் இல்லாத காலம் போய் தற்போதைய காலக்கட்டத்தில் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டாலே போதும் உடனே மின்வாரியத்துக்கு போன் செய்து எப்போது கரண்ட் வரும் என்று கேட்கும் சூழல் உருவாகியுள்ளது. அந்த அளவுக்கு மின்தேவையின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். அதன்படி பிப்ரவரி 23ம் தேதி நாளை மறு நாளன்று திங்கள் கிழமை தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மின் தடை பகுதிகளாக குஜிலியம்பாறை, கோவிலூர், வரதராஜபுரம், குண்டம்பாடி, வடுகம்பாடி, ஆர்.கோம்பை, நெட்டோபட்டி, சத்திரப்பட்டி, நரசிங்கபுரம், சாணிப்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, பூசாரிபட்டி, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்த்தேயன்கோட்டை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
தேனி மாவட்டத்தில் மின் தடை பகுதிகளாக ஆத்தங்கரைப்பட்டி, வரசநாடு, குமணந்தொழு, அருகேவெளி, துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
உடுமலைப்பேட்டை மின் தடை பகுதிகளாக பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு, முத்துசாமி உள்ளிட்ட பகுதிகளில்வரும் திங்கள் கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.























