தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சாரமானது நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அதன்படி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மின் தடை
கோவையில் சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
தர்மபுரி மின் தடை
தர்மபுரியில், ராமியனஹள்ளி, சிந்தல்பட்டி, பூதநத்தம், நாவலை, ஆண்டிப்பட்டி, ராமபுரம், கடத்தூர், ரேகடஹள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, நத்தமேடு, பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், பைராநத்தம், சாமியாபுரம் எக்ஸ் ரோடு, காளிப்பேட்டை, மஞ்சவாடி, ஏ.பள்ளிப்பட்டி, எருளப்பட்டி, அதிகாரப்பட்டி, எருமையம்பட்டி, மெனச்சி, கவுந்தப்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
கிருஷ்ணகிரி மின் தடை
கிருஷ்ணகிரியில், கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னாட்டி, உப்பரப்பள்ளி, ஜகீர்கொடிப்பள்ளி, தளி உப்பனூர், குருபரப்பள்ளி கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கோத்தூர், தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நோகனூர், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதனப்பள்ளி, தண்டரை, பென்னாங்கூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
சேலம் மின் தடை
சேலத்தில், ஆரியபாளையம், தளவாய்பட்டி, பி.என்.பாளையம், ஏத்தாப்பூர், கல்யாணகிரி, பெரியேரி, நத்தக்கரி, சித்தேரி, கோவிந்தம்பாளையம், புளியங்குருச்சி, புளியங்குருச்சி, மணிவிழுந்தான், ஊனத்தூர், இலுப்பநத்தம், சாத்தபாடி, வேப்பம்பூண்டி, ராசிபுரம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
மின் தடை முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள்
* மின் தடை அமலுக்கு வரும் முன் மொபைல், பவர் பேங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளவும்.
* மின்சார பம்புகள் இயங்காது என்பதால் குடிநீர் மற்றும் வீட்டு நீரை போதுமான அளவில் சேமித்து வைத்திருக்கவும்.
* மின் விநியோகம் மீண்டும் தொடங்கும்போது சேதம் ஏற்படாமல் இருக்க அனைத்து மின்சாதனங்களையும் அணைத்துவிடவும்.
* மெழுகுவர்த்தி, டார்ச் அல்லது பேட்டரி விளக்குகளை தயார் நிலையில் வைத்திருக்கவும்.
* மருத்துவ உபகரணங்கள் மற்றும் குளிர்விப்பு தேவைப்படும் மருந்துகளுக்கான மாற்று ஏற்பாடுகளை முன்னதாக செய்து கொள்ளவும்.
* மின் தடை நேரத்தில் லிஃப்ட் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
* அன்றாட வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, மின்சாரம் திரும்பும் வரை ஒத்துழைப்பு வழங்கவும்