மேலும் அறிய

பொற்கொடி உயிருக்கு ஆபத்து..? குரல் கொடுத்த திருமாவளவன்! பரபரப்பை கிளப்பிய அரசியல் களம்!

பொற்கொடியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் திருமாவளவனே சுட்டிக்காட்டியுள்ள நிலையில், தமிழகக் காவல்துறை உடனடியாக அவருக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சென்னை: மறைந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, தற்போது அதிமுக கூட்டணியில் இணைந்து திருவிக நகர் தொகுதியில் போட்டியிடுவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாற்று முகாமில் இருந்தாலும் பொற்கொடியின் பாதுகாப்பு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எழுப்பியுள்ள கவலை, விவாதப் பொருளாக மாறியுள்ளது.
 
மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி இப்போது அதிமுக கூட்டணியில் இணைந்து திருவிக நகர் தொகுதியில் வேட்பாளராக நிற்கிறார்.
தன்னுடைய கணவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டும் என்பதற்காகத் தான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று பொற்கொடி கூறியுள்ளார். இதையடுத்து அவர் வாக்கு சேகரிக்கச் செல்லும் இடங்களில் எல்லாம் மிகப்பெரும் வரவேற்பு கிடைக்கிறது. பொற்கொடிக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் களம் இறங்கியுள்ளன.
 
பொற்கொடிக்கு கிடைத்துவரும் அமோக வரவேற்பு திமுக கூட்டணிக்கு கடும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. அதனால், தனக்கு பல்வேறு வகையில் நெருக்கடி தரப்படுவதாக பொற்கொடி கூறியிருந்தார். 
 
இந்த நிலையில் திருமாவளவனும் பொற்கொடி உயிருக்கு ஆபத்து இருப்பதை வெளிப்படையாக சுட்டிக்காட்டியிருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்திருக்கும் பேட்டியில், ’’கணவர் இறந்தவுடன் பொற்கொடி வீட்டிற்குள் முடங்கி விடாமல் துணிச்சலாக பொது வாழ்விற்கு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இது போன்று பெண்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். தொடர்ந்து கணவர் இறப்புக்கு நீதி கோரி போராடிவரும் பெற்கொடியையும், அவரது அரசியல் வருகையையும் நாங்கள் ஆதரிக்கிறோம். 
 
அவருக்கு பாதுகாப்பு தேவை. அவர் துணிச்சலுடன் பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளதை நான் பாராட்டுகிறேன். அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. மேலும், அரசியலில் அவருக்கு ஒரு இடமும் தேவைப்படுகிறது. அதிமுக அவருக்கு அந்த இடத்தை வழங்கியிருந்தால், அதை நாங்கள் அதை வரவேற்கிறோம்’’ என்று கூறியிருக்கிறார்.
 
பொற்கொடி உயிருக்கு ஆபத்து இருப்பதை எதிர்க் கூட்டணியில் இருந்தாலும் திருமாவளவன் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்திருக்கிறார். இனியாவது காவல் துறை பொற்கொடிக்கு போதிய பாதுகாப்பு வழங்க முன்வர வேண்டும் என்று அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் கோரிக்கை வைக்கிறார்கள். 
கலகம், அசம்பாவிதம் செய்து, அச்சமூட்டினால் பொற்கொடி தேர்தல் களத்திலிருந்து பின்வாங்கிவிடுவார் என்று திமுகவினர் நினப்பது நடக்காது என்று பொற்கொடி ஆதரவாளர்கள் எதிர்ப்பு குரல் கொடுக்கிறார்கள்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"என்னோட வெற்றிக்கு பின்னால் என் கணவர் சுந்தர் இருக்காரு" - குஷ்பு EMOTIONAL SPEECH !
TVK Vijay: ஸ்பீட் ஏத்தப்போகும் விஜய்! பரப்புரையில் ஃபயர் விட ரெடியாகும் தவெக!
TVK Vijay: ஸ்பீட் ஏத்தப்போகும் விஜய்! பரப்புரையில் ஃபயர் விட ரெடியாகும் தவெக!
"குஷ்பு - சுந்தர் சி" இருவரும் மீனாட்சி சுந்தரேஸ்வர் போல் இருக்கின்றனர் - செல்லூர் ராஜு புகழ்ந்து பேசினார் !
AIADMK: தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!
AIADMK: தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெகவில் யாரும் போட்டியிடவில்லை - கடைசியில் நேரத்தில் நடந்தது என்ன?
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெகவில் யாரும் போட்டியிடவில்லை - கடைசியில் நேரத்தில் நடந்தது என்ன?
Edappadi Palanisamy: ’’திமுகவுக்கு இது கடைசி தேர்தல்; அதிமுக ஆட்சில மூணே மாசத்துல கஞ்சாவ முழுசா ஒழிப்போம்’’ சூளுரைத்த ஈபிஎஸ்
Edappadi Palanisamy: ’’திமுகவுக்கு இது கடைசி தேர்தல்; அதிமுக ஆட்சில மூணே மாசத்துல கஞ்சாவ முழுசா ஒழிப்போம்’’ சூளுரைத்த ஈபிஎஸ்
Honda Offers: நாங்களும் தருவோம் தள்ளுபடி.! 1.80 லட்சம் ஆஃபர்.. City முதல் Amaze வரை - ஹோண்டா அறிவிப்பு!
Honda Offers: நாங்களும் தருவோம் தள்ளுபடி.! 1.80 லட்சம் ஆஃபர்.. City முதல் Amaze வரை - ஹோண்டா அறிவிப்பு!
ICAI Changes: சிஏ மாணவர்களே.. தேர்வில் 2 முக்கிய மாற்றங்களை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
ICAI Changes: சிஏ மாணவர்களே.. தேர்வில் 2 முக்கிய மாற்றங்களை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
TVK Vijay: ஸ்பீட் ஏத்தப்போகும் விஜய்! பரப்புரையில் ஃபயர் விட ரெடியாகும் தவெக!
TVK Vijay: ஸ்பீட் ஏத்தப்போகும் விஜய்! பரப்புரையில் ஃபயர் விட ரெடியாகும் தவெக!
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை எப்போது வருகிறது? அன்று தங்கம் வாங்க நல்ல நேரம் என்ன? - முழு விவரம் இதோ
அட்சய திருதியை எப்போது வருகிறது? அன்று தங்கம் வாங்க நல்ல நேரம் என்ன? - முழு விவரம் இதோ
நான் முதலமைச்சர் ஆவதற்கு முன்பே உங்கள் ஊர் மாப்பிள்ளை! தேர்தல் பிரச்சாரத்தின் முதல்வர் ஸ்டாலின் சுவாரசியம்..  
நான் முதலமைச்சர் ஆவதற்கு முன்பே உங்கள் ஊர் மாப்பிள்ளை! தேர்தல் பிரச்சாரத்தின் முதல்வர் ஸ்டாலின் சுவாரசியம்.. 
’’தேசம் உங்களை மன்னிக்காது; நீங்கள் அடையப்போவது என்ன?’’ மம்தா பானர்ஜிக்கு ஜோதிமணி பதிலடி!
’’தேசம் உங்களை மன்னிக்காது; நீங்கள் அடையப்போவது என்ன?’’ மம்தா பானர்ஜிக்கு ஜோதிமணி பதிலடி!
Embed widget