விழுப்புரம் : தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் மக்களிடையே செல்வாக்கை பெற்றிருப்பதாகவும் தவெக அரசுக்கு வாக்களித்த தமிழக மக்கள் ஏன் இந்த தவறை செய்துவிட்டோம் என மக்கள் உணரும் அளவிற்கு இப்பொழுது தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியின் 76 வது பிறந்த நாளை திமுக நிர்வாகிகளுடன் கொண்டாடினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி தான் சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஒன்னரை ஆண்டுகளுக்கு முன்னர் தான் தொடரப்பட்ட வழக்கினை 28 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளதாகவும், இந்த வழக்கினை தொடர்ந்த சகோதரிக்கு அவரது மனது புண்பட்டிருந்தால் அவரிடம் வருத்ததையும் மன்னிப்பையும் தெரிவித்திருந்ததாகவும், இதில் யாரேனும் மனது புன்பட்டு இருந்தால் அவர்களிடம் ஊடகம் வாயிலாக மன்னிப்பையும் வருத்ததையும் கேட்டுகொள்வதாக தெரிவித்தார். 

இந்த வழக்கு 28 ஆம் வருவதால் அதற்கான முடிவுகள் விரைவில் வரும் என எதிர்பார்ப்பதாகவும், நிச்சயமாக இனிமேல் இதுபோல் தான் பேசுவதற்கு வாய்ப்பில்லை என பகிரங்கமாக தெரிவித்தார். தங்களுடைய நிரந்தர முதல்வர் ஸ்டாலின் மீண்டும் மக்களிடையே செல்வாக்கை பெற்றிருப்பதாகவும் ஏன் இந்த தவறை செய்துவிட்டோம் என மக்கள் உணரும் அளவிற்கு இப்பொழுது தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவதாகவும் அதற்கான பதில்கள் விரைவில் வரும் என தெரிவித்தார். 

Continues below advertisement

கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்ச்சியோடு செயல்பட்டு கொண்டு இருப்பதாகவும், காக்ரோச் பார்ட்டி, கம்யூனிஸ்ட் இயக்கங்களுடன் தொடர்பு வைத்துள்ளவர்கள் குறித்து தகவல் தரவேண்டுமென கல்லூரி கல்வி இயக்குனர் சுற்றிக்கை அனுப்பி இருந்தது திரும்ப பெறப்பட்டுள்ளது. இதற்கு கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வோடு செயல்பட்டது தான் காரணம் என்றும் மாணவர்களின் விழிப்புணர்வு காரணமாக தான் திராவிட இயக்கமும் பொதுவுடமை இயக்கம் வளர்ந்து வருவதாக பொன்முடி தெரிவித்தார்.