பொங்கல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை (29.12.2022) முதல் தொடங்குகிறது. பொங்கல் சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்கும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரம் - நெல்லை - சென்னை எழும்பூர். தாம்பரம் - நாகர்கோயில், கொச்சுவேலி - தாம்பரம் ரயில்களுக்கு நாளை முதல் முன்பதிவு செய்யலாம்.
பொங்கல் சிறப்பு இரயில் முன்பதிவு விவரம்:
- இரயில் எண் - 06021 / 06022 தாம்பரம் - திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு இரயில்
- இரயில் எண் - 06041 தாம்பரம் நாகர்கோயில்
- இரயில் எண் - 06042 நாகர்கோயில் - தாம்பரம் சிறப்பு இரயில்
- இரயில் எண் - 06044 / 06043 - கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு இரயில்
- இரயில் எண் - 06046 / 06045 எர்ணாகுளம் - டாகடர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல்
- இரயில் எண் 06057 / 06058 தாம்பரம் - திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு இரயில்
தென் மாவட்டங்களுக்கு சிறப்பு இரயில்:
சென்னையில் இருந்து நாகர்கோவில் -' திருவனந்தபுரம் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி , தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில் (06041) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13 அன்று இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06042) ஜனவரி 16 அன்று நாகர்கோவிலில் இருந்து மாலை 05.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ஒரு குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 13 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
மேலும் வாசிக்க..