பொங்கல் பண்டிகை- சிறப்பு ரயில்

  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் கூடுதல் நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே சார்பில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துதெற்குரயில்வேவெளியிட்டுள்ளஅறிக்கையில், சென்னை சென்ட்ரல் தூத்துக்குடி சென்னை சென்ட்ரல் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. (ரயில் எண் 06151) ஜனவரி  12 மற்றும் 19 ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் நண்பகல் 12.15 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மறுமார்க்கத்தில் ( ரயில் எண் 06152) ஜனவரி 13 மற்றும் 20 ஆம் தேதி மாலை 5.50 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • திருநெல்வேலி தாம்பரம் திருநெல்வேலி இடையே சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. (ரயில் எண் 06058) திருநெல்வேலியில் இருந்து ஜனவரி13 மற்றும் 20 ஆம் தேதி அன்று காலை 3.45 மணிக்கு புறப்பட்டு அதே நாள் பிற்பகல் 2.00 மணிக்கு தாம்பரத்தை சென்றடையவுள்ளது.
  • மறுமார்க்கத்தில் (ரயில் எண் 06057) தாம்பரத்தில் இருந்து அதே நாட்களில் பிற்பகல் 3.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 2.00 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். என கூறப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் ஏசி பெட்டிகள், சாதாரண வகுப்புசேர்கார் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கானபெட்டிகள் இணைக்கப்படும்எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
  • போத்தனூர் டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் போத்தனூர் இடையே எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது. (ரயில் எண் 06194,) ஜனவரி மாதம் 08  2026 அன்று இரவு 11.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும். இதன் மறுமார்க்கத்தில் (ரயில் எண் 0619) ஜனவரி 09 ஆம் தேதி  இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.05 மணிக்கு போத்தனூரை அடையும் எனவும், இந்த ரயிலில் முழுவதும் ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
  •  திருநெல்வேலி செங்கல்பட்டு திருநெல்வேலி இடைலிலான சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. (ரயில் எண் 06154) திருநெல்வேலியில் இருந்து 14 ஜனவரி 2026 (புதன்கிழமை) காலை 3.45 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.15 மணிக்கு செங்கல்பட்டைவந்தடைகிறது. மறுமார்க்கத்தில் ( ரயில் எண் 06153) செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலைகாலை 2.00 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும் எனகூறப்பட்டுள்ளது.
  • திருநெல்வேலி தாம்பரம் இடையே எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. (ரயில் எண் 06166) ஜனவரி  12 மற்றும் 19 அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு அதே நாள் பிற்பகல் 1.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.  மறுமார்க்கத்தில் (ரயில் எண் 06165) தாம்பரத்தில் இருந்து மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.00 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையவுள்ளது. இந்த ரயில்களில் ஏசி இரண்டாம், மூன்றாம் வகுப்பு, ஸ்லீப்பர் மற்றும் பொது பெட்டிகள் இணைக்கப்படும்எனஅறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (08.01.2026) காலை 8.00 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.