பொங்கல் தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவின் வடநாட்டு பகுதிகளில் இது மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. இது தமிழ்நாட்டை தவிர ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் இந்த விழா பெரிதாக கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் வாரத்தில் ஆண்டுதோறும் கொண்டாப்படும் இந்த ’பொங்கல்’ பண்டிகை உழவர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு பெருவிழாவாக பார்க்கப்படுகிறது. 

அரைக்கோளத்தின் தெற்குப் புள்ளியில் சூரியன் அஸ்தமித்து, வடக்கு நோக்கி தனது பயணத்தை தொடங்கும் நிகழ்வாக பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு ஜனவரி 15 அன்று தொடங்கி ஜனவரி 18ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. 

தை மாதம் ஏன் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது?

தை மாதத்தை பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் மிக முக்கியமான மாதமாகவும், நன்மை தரும் மாதமாகவும் பார்ப்பார்கள். இந்த மாதத்தில்தான் தங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் நிகழும் என்றும், தங்கள் பிரச்சினைகள் தீரும் என்றும் மக்கள் நம்புகின்றனர். நெல், கரும்பு, மஞ்சள் போன்றவற்றை அறுவடை செய்யும் காலம் இது. இந்த மாதத்தில் நிச்சயதார்த்தம், திருமணங்கள் மற்றும்  புது வீடு பால் காய்ச்சுதல் போன்ற நற்காரியங்களை மக்கள் அதிகளவில் செய்வர். 

பொங்கல் வரலாறு உங்களுக்கு தெரியுமா..? 

புராண கால வரலாறுபடி, பொங்கல் கொண்டாட இருவேறு கதைகள் கூறப்படுகிறது. அதில் ஒன்று, சிவனையும் நந்தியையும் பற்றியது. மற்றொன்று, கிருஷ்ணரையும் இந்திரனையும் பற்றியது. 

கதை: 1

சிவபெருமான் தனது காளையான நந்தியை பூமிக்கு அனுப்பி, மக்களிடம் ஒவ்வொரு நாளும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கவும், மாதத்திற்கு ஒரு முறை உணவையும் சாப்பிட சொல் என்று தூது அனுப்பியுள்ளார்.

பூமிக்கு சென்ற நந்தி குழம்பிபோய், மக்களிடம் அனைவரும் தினமும் சாப்பிடவும், மாதம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த சிவபெருமான், நந்தியை பூமியில் நித்தமும் கழிக்கும்படி சாபமடைந்தார். மேலும் வயல்களை உழுது, அதிக உணவை உற்பத்தி செய்வதில் மக்களுக்கு உதவும் பொறுப்பை பெற்றது நந்தி. இதன் விளைவாக, தற்போதுவரை  புதிய விளைபொருட்களுக்கான பயிர் அறுவடை செய்வதற்கு கால்நடைகள் உதவியாக கூறப்படுகிறது. 

கதை: 2 

புராணங்களின்படி, அனைத்து தேவர்களுக்கும் ராஜாவாகிறார் இந்திரன். இதனால், அவர் அதிக கர்வம் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது, குழந்தை பருவத்தில் இருந்த கிருஷ்ணர், பசு மேய்பவர்கள் அனைவரையும் இந்திரனை வணங்க வேண்டாம் என்றும், நிறுத்துமாறும் கூறியுள்ளார். இதனால், கோபம் கொண்ட இந்திரன் இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் வெள்ளத்தை ஏற்படுத்த பேரழிவு ஏற்படுத்த மேகங்களை அனுப்பியுள்ளார். 

இதையறிந்த பகவான் கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தூக்கி, மக்கள் மற்றும் அனைத்து கால்நடைகளையும் பாதுகாக்க செய்து, இந்திரனுக்கு அருள் புரிகிறார். இதனால், இந்திரனின் கோபம் உடைந்து, கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்டார். இதையே கொண்டாடும் நிகழ்வாக பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. 

பொங்கல் விழா:

விழா தேதி நாள்
போகி ஜனவரி 14 ஞாயிற்றுக்கிழமை
பொங்கல் ஜனவரி 15 திங்கட்கிழமை
திருவள்ளுவர் தினம் ஜனவரி 16 செவ்வாய்
உழவர் திருநாள் ஜனவரி 17 புதன்