கரூர் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் அமராவதி ஆறு மாசுபடுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாநகராட்சி பகுதியில் 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஆண்கள் ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேர்களும் பெண்கள் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேரும் உள்ளனர். கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் செயல்படுகிறது. அமராவதி மற்றும் காவிரி ஆறுகளில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கரூர் மாவட்டத்தை பொருத்தவரை காவிரி ஆற்றில் கழிவு நீர், மாசுபட்ட நீர் குறைவான அளவிலேயே கலக்கிறது. அதே சமயம் அமராவதி ஆற்றில் கரூர், தான்தோன்றி மலை, வெங்கமேடு, பசுபதிபாளையம், ராயனூர், மேலப்பாளையம், சனப்பிரட்டி, தொழிற்பேட்டை, காந்திகிராமம் ஆகிய பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சிறிய கடை மற்றும் தொழிற்சாலை உள்ள கழிவு நீர் நேரடியாக அமராவதி ஆற்றில் கலந்து முழுமையாக நீரை மாசுபட செய்கிறது.
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி கழிவு நீர் அமராவதி ஆற்றில் கலப்பதை முழுமையாக தடுக்க வேண்டும். இரட்டை வாய்க்கால் பணி 80 சதவீதம் முடிவுற்ற நிலையில் கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலப்பதற்கு முன்னால் சுத்தகரிப்பு நிலையம் அமைத்து கழிவு நீரை சுத்தகரிப்பு செய்து அதன் பின் ஆற்றில் கழகச் செய்ய வேண்டும். மேலும், சுத்திகரிப்பு செய்யப்பட்டு கழிவு நீர்களை மாற்று வழி பாதை மூலம் விவசாயத்திற்கு கொண்டு சென்று அமராவதி ஆறு மாசுபடுவதை முழுமையாக தடுக்க வேண்டும்.
40 ஆண்டுகளுக்கு முன்பாக அமராவதி ஆற்றில் தண்ணீர் மிகவும் சுத்தமாக இருந்துள்ளது. அதனை பொதுமக்கள் நேரடியாக குடிநீருக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால், இன்று குடியிருப்புகள் அதிகரித்த காரணத்தாலும், தொழிற்சாலைகள் நிறைந்த காரணத்தாலும் அமராவதி ஆற்றில் கழிவுநீர் மற்றும் சாயப்பட்டறை நீர் கலப்பதால், அமராவதி ஆற்றின் நீரை நேரடியாக குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தேசிய நதிநீர் பாதுகாப்பு ஆணையத்தின் நீர்வளப் பிரிவு பொதுப்பணித்துறை நிர்வண ஆதார கண்காணிப்பு விரைவில் அமராவதி ஆற்றில் கழிவுநீர் மற்றும் சாக்கடை நீர் கலப்பதை தவிர்க்க வேண்டும். கரூர் மாநகராட்சி வரும் கிராமப்புற உள்ளாட்சி தேர்தலுக்குப் பின் கூடுதலாக கரூர் மாநகராட்சி தெளிவுபடுத்தப்படும் நிலையில் இருப்பதால் மக்கள் தொகை இருப்பதைவிட 3 லட்சம் வரை உயரம் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சி பகுதிக்கு தினசரி வெளி மாவட்டங்களில் இருந்து திண்டுக்கல், நாமக்கல், திருச்சி ஆகிய பகுதியில் இருந்து தினசரி சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்து செல்வதால் மக்கள் தொகை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும்.
இவ்வாண்டு பருவமழை வழக்கத்தை விட மிகவும் அதிகமாக பெய்ததாலும், பருவமழை முந்தி பெய்ததாலும் அமராவதி ஆற்றில் கழிவு நீரை அதிக அளவில் கலந்தாலும் கூட மழை நீர் அதிகம் வந்த காரணத்தால் மாசுபடாமல் தண்ணீர் தூய்மையாக உள்ளது. எனவே, இதனை கருத்தில் கொண்டு ஆறுகள் மாசுபடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.