நீட் விலக்கு மசோதா தொடர்பாகத் தமிழ்நாடு அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவுக்கு நேரம் ஒதுக்காத நேரத்தில், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு மத்திய உள்துறை அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. 


கடந்த ஜனவரி 5ம் தேதி தனது, திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது 54வது பிறந்தநாளைக் கொண்டாடினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய/மாநில அரசியல் தலைவர்கள் என பலரும் கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்தனர். இதில், குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அன்று கனிமொழியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 


இது, மரியாதை நிமித்தமான உரையாடல் என்றாலும், நீட் விலக்கு மசோதா தொடர்பாக தமிழ்நாடு அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவுக்கு அமித் ஷா நேரம் கூட ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு மத்தியில் இந்த உரையாடல் சம்பவம் நடைபெற்றிருப்பது அரசியல் பார்வையுடன் அணுகக்கூடிய விசயமாக பலரும் பார்க்கின்றனர்.         


நீட் விலக்கு மசோதா தொடர்பாக தமிழ்நாடு அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவுக்கு நேரம் ஒதுக்காத நேரத்தில், பாரளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு மத்திய உள்துறை அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. 




கனிமொழி பிறந்தநாளுக்கு அடுத்த நாள் தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், " மக்கள் பிரதிநிதிகளை சந்திக்காமல் இருப்பது ஜனநாயக மரபல்ல" என்று அமித் ஷாவை கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், இந்த காலாகட்டத்தில் தான், வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீளவும்,சேதமடைந்த உள்கட்டமைப்புகளை புனரமைக்கவும் மத்திய உள்துறை அமைசச்சர்  நிதி ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை வலுவாக திமுக  முன்னெடுத்தது.  


அரசியல் பார்வை: 


தமிழகத்தில் வேரூன்றியிருக்கும் திராவிட கட்சிகளைப் பிளவுபடுத்த கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகளை தேசிய அரசியல் கட்சிகள் முன்னேடுத்திருக்கின்றன. மாநில அரசியலில் பெரும் பிளவை ஏற்படுத்திய முக்கிய தலைவர்கள் அனைவரும் இந்திய  நாடாளுமன்ற உறுப்பினர்களாகவே இருந்திருக்கின்றனர் என்பது கூடுதல் தகவல்.      


உதாரணமாக, 1961ல் அண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் திமுகவிலிருந்து பிரிந்து சென்று தமிழ் தேசியக் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கிய ஈ. வெ. கி. சம்பத்;   எம். ஜி.ஆர் திமுகவில் இருந்து  விலகி தனிக்கட்சி தொடங்குவதற்கு முக்கிய உந்துதல் சக்தியாக இருந்த நாஞ்சில் மனோகரன்; எம். ஜி.ஆர் மறைவுக்குப் பின், அதிமுகவை பிளவுபடுத்திய ஜெ. ஜெயலலிதா; திமுகவிலிருந்து நீக்கப்பட்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய வைகோ;  அதிமுகவில் இருந்து விலகிய சசிகலா புஷ்பா என இந்தப் பட்டியல் நீள்கிறது. கூட்டாட்சி அரசியலில் இந்த அரசியல் கோணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாகவும் அமைகிறது. 




 


இதற்கிடையே, கனிமொழி- உதயநிதி ஸ்டாலின் இடையே நடக்கும் அதிகாரப் போட்டியை பாஜக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அந்த கண்ணோட்டத்தில் தான் அமித் ஷாவின் சமீபத்திய தொலைபேசி உரையாடலை பார்க்க வேண்டும் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால், என்ன செய்தால் என்ன நடக்கும் என்ற அரசியல் புரிதல் தான் பாஜக செயல்பாடுகளைக் கட்டுபடுத்துகிறது.     


இருப்பினும், இது போன்ற கருத்துகள் மிகவும் அபத்த மானது என்றும் சிலர் தெரிவிக்கின்றனர். கனிமொழி என்பவர் திராவிட அரசியலின் சமூகக் குறியீடு; தனக்கான அரசியலை தானே எழுதிக் கொள்பவர். கட்சி அரசியலைத் தாண்டி திராவிடப்  பண்பாட்டு மொழியியழில் அதிக கவனம் செலுத்துபவர். பன்மீகப் பார்வைகளுடன் தான் கனிமொழியின் அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.              


அதே போன்று, தமிழகத்துக்கும் டெல்லி அரசியல் ஒன்றும் புதிய விஷயமல்ல. உதாரணமாக, 1969 காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டு காமராஜர் தலைமையில் நிறுவன காங்கிரஸ் என்றும் இந்திரா காந்தி தலைமையில் இந்திரா காங்கிரசு என்று செயல்பட்டது. அப்போது, வங்கிகளை தேசியமயமாக்குதல், தனியுரிமை பணப்பை (privy purse) ஒழித்தல், சொத்துரிமையை நீக்குதல் போன்ற திட்டங்களுக்கு திமுக நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தது. நாடு முழுவதும், பொதுவுடைமை, மதச்சார்பின்மை சிந்தனையை கொண்டு சென்றதில் திமுகவுக்கு அதிக பங்குண்டு.




தேசிய அரசியலில் முன்னாள் முதலமைச்சர்களான கலைஞர் கருணாநிதியும்,செல்வி ஜெயலலிதாவும் வலுவான கால்தடம் பதித்திருந்திருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக சமீபத்தில், கூட்டாட்சி முறை மற்றும் சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட ஒரு அகில இந்தியக் கூட்டமைப்பை தொடங்கப்போவதாக மு.க ஸ்டாலின் அறிவித்தார். அதில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர்கள்  இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டார். இதன் மூலம், தேசிய அரசியலில் தனது விருப்பத்தை ஸ்டாலின் முதன்முறையாக வெளிப்படுத்தினார். எனவே, தேசிய அரசியல் மட்டத்தில் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கும்  அரசியலை திமுக முன்னெடுத்து வருகிறது.