அரைவேக்காடு


முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்...,”தமிழகத்தில் மோடி பிரச்சாரம் செய்தும் தமிழகத்தில் ஒரு இடம் கூட பிடிக்கவில்லை, அண்ணாமலை போன்றவர்களால் தான் இன்றைக்கு பாஜக படுதோல்வியை தழுவி உள்ளது. 2019-ல் நாடாளுமன்றத்தில் 300 இடங்களை பிடித்த பாஜக அரசு, 2024-ல் தேசிய கூட்டணி அமைத்து தனிப்பெரும்பான்மையை பிடிக்க 272 இடங்களை கூட பாஜகவினர் பிடிக்க முடியவில்லை. அண்ணாமலை போன்ற அரைவேக்காடு நபர்களால் தான் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. 2019 பா.ஜ.க கூட்டணியில் பெற்ற வாக்குகளை விட 2024ல் அதிமுக தனித்து போட்டியிட்டு ஒரு சதவீதம் அதிகமாக வாக்குகள் வாங்கியுள்ளோம். தமிழகத்தில் அண்ணாமலை பெற்றிருக்கும் வாக்குகள் பிரதமரை முன்னிறுத்தி பெற்ற வாக்குகள் தவிர., அண்ணாமலைக்கு தமிழகத்தில் யாரும் வாக்குகள் அளிக்கவில்லை. அவர் பெற்றிருக்கிற வாக்குகள் பிரதமருக்கும், கூட்டணியில் போட்டியிட்ட பாமக, அமமுக, OPS ஆகியோருக்கு வழங்கப்பட்ட வாக்குகள் தான்.


வாய்சவடால் பேசும் அண்ணாமலை


கிரிமினல் பின்புலத்தில் உள்ளவர்களை அண்ணாமலை முன்னிறுத்துகிறார். பாஜகவில் நீண்ட நாள் உழைத்தவர்கள், கட்சியின் மூத்தவர்களை அண்ணாமலையால் புறம் தள்ளப்படுகிறார்கள். அதிமுகவை உருவாக்கிய அண்ணாவை, அம்மாவை இன்றைக்கு தொடர்ந்து அவதூறாக பேசிவருகிறார் அண்ணாமலை. அண்ணாமலையின் பேச்சை அதிமுகவை சேர்ந்த எந்த தொண்டனும் சகித்துக்கொண்டு பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அண்ணாமலையில் இந்த வாய்ச்சவடாலால் எந்த திட்டத்தை தமிழகத்திற்கு வாங்கி கொடுத்துள்ளார்.? பேரிடர் காலத்தில் எவ்வளவு நிதியை எத்தனை முறை பெற்று தந்தார்? இன்றைக்கு மெட்ரோ திட்டத்திற்கு இரண்டாம் கட்டமாக நிதி வழங்கவில்லை என திமுக குற்றம் சாட்டுகிறது. ஆனால், வாய்சவுடால் பேசும் அண்ணாமலை மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்று தந்தாரா.?


வாபஸ் வாங்க வேண்டும்


தமிழக உரிமைகளை பறிக்கும் ஜீவதார பிரச்சனைகளான கர்நாடக மேகதாது அணை, முல்லைப் பெரியாறு அணை உள்ளிட்ட தமிழ்நாட்டின் விவசாயிகள் பிரச்சனைக்கு வாய்ந்திறக்கிறாரா அண்ணாமலை.? அண்ணாமலை போன்ற அரைவேக்காடுக்கு அரசியல் வாழ்க்கை கேள்விக்குறி.? தான். கிராமத்தில் காய்த்த மரம் தான் கல்லடி பெறும் என்ற பழமொழிக்கு ஏற்ப மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்ற எடப்பாடி பழனிச்சாமியை இன்றைக்கு சுற்றி சுழன்று கொண்டு அவதூறு பேசுகிறார். அண்ணாமலை தொடர்ச்சியாக அதிமுக குறித்தும் தலைவர்கள் குறித்து பேசுவதை வாபஸ் வாங்க வேண்டும். அப்படி வாபஸ் வாங்கவில்லை என்றால் அதிமுக உண்மை விசுவாச தொண்டர்கள் எவ்வித போராட்டமும் நடத்த முற்றுகை போராட்டம், உறுவபொம்மை எரிப்பு, என எவ்வித போராட்டமும் நடத்த தயாராக இருக்கிறார்கள். 


டி.டி.வி சந்திப்பு


அதிமுக குறித்து உங்களுக்கு ஏன் அந்த கவலை.? நீங்க பாஜகவின் உறுப்பினரா.? அல்லது அதிமுகவின் உறுப்பினரா.? அதிமுகவை பற்றி அதிமுக தொண்டர்களும், தலைவர்களும் பார்த்துக் கொள்வார்கள்..! உங்களுடைய அனுதாபம் அதிமுகவிற்கும், அதிமுக தொண்டர்களுக்கும் தேவையில்லை.! சிறையில் இருந்தவர்களை நீங்கள் வீடு தேடி சந்தித்து அவர்களை மாய வலையில் வீழ்த்துகிறீர்கள், இந்த வலை அதிமுகவிற்குள் எடுபடாது. 2016-ல் பாஜக கூட்டணி வைத்து வெற்றி பெற்றது., அதில் அவர்கள் பெற்ற வாக்கு சதவீதம் எண்ணிக்கை என்ன.? 2019 அதிமுக கூட்டணியில் அவர்கள் பெற்ற வாக்கு சதவீதம் என்ன.? தற்போது 2024-ல் பாஜக புறம்தள்ளி தனித்து நின்று கடந்த முறையை விட ஒரு சதவீதம் அதிகமாக வாக்கு சதவீதம் பெற்றுள்ளோம். இந்த வாக்கு சதவித முடிவுகளை வைத்து தான் அதிமுக பொதுச் செயலாளர் கூட்டணி குறித்து முடிவெடுப்பார். டிடிவி தினகரன் வாழ வைப்பதற்காக அண்ணாமலை சந்திக்கிறாரா.? இல்லை அவரை வாழா வெட்டியாக வைப்பதற்கு தான் விடு தேடி செல்கிறார். அண்ணாமலைக்கு "ஒரு தலைமைக்கான பண்பு என்ன என்று தெரியுமா.?" தலைமை பண்புக்கான அடையாளம் ரகசியம், நம்பிக்கை காப்பாற்றப்பட வேண்டும். நாளை கூட அண்ணாமலையிடம் டெல்லி தலைவர்கள் பேசியதை கூட ஆடியோவாக வெளியிடுவார். டெல்லி தலைமை அண்ணாமலையிடம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்.