வன்னியர் சங்க சித்திரை முழு நிலவு மாநாடு

வன்னியர் சங்கத்தை அடிப்படையாக வைத்து துவங்கப்பட்ட கட்சியான பாமக தனது கட்சி தொண்டர்களை, தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை,  "சித்திரை முழு நிலவு நாளன்று" வன்னியர் சங்க மாநாடுகளை நடத்தி வந்தது. முதலில் பூம்புகார் பகுதியில் வன்னியர் சங்க மாநாடு நடத்தி வந்த பாமக, பிறகு மகாபலிபுரத்தில் வன்னியர் சங்க மாநாடுகளை நடத்தி வந்தது. பல்வேறு காரணங்களுக்காக கடந்த 12 ஆண்டுகளாக மாநாடு நடத்தப்படாமல் இருந்து வருகிறது.இந்த நிலையில் இந்த ஆண்டு சித்திரை முழுநிலவு வள்னிய இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெறவுள்ளது.

மாநாடு அழைப்பிதழ்:

இதற்கான அழைப்பிதழை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.. அந்த அழைப்பிதழ் பின்வருமாறு

அன்பு உறவினருக்கு. வணக்கம்! வரும் சித்திரை 28. மே மாதம் 11-ஆம் நாள் 2025. மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழுநிலவு வள்னிய இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டிற்கு தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் கலந்து கொண்டு பெருமை சேர்க்க வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன்.

சமூகநீதிப் போராளி மருத்துவர் அய்யா அவர்கள் 45 ஆண்டுகளாக வன்னியர் மேம்பாட்டுக்காகவும். ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் தொடாந்து போராடி வருகிறார். ஆனால், வன்னியர்கள் கல்வி வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அரசியல் அதிகாரம், மனிதமேம்பாட்டுக் குறியீடுகள் உள்ளிட்டவற்றில் இன்னும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். தமிழ்நாட்டின் தனிப்பெரும் சமுதாயமாக இருந்தும். முன்னேற முடியாத ஒரு நிலைமை என்பது சமூகநீதிக்கு எதிரானது ஆகும். இந்த அவல நிலை மாற வேண்டும். தமிழ்நாடு இந்தியாவின் முன்னேறிய மாநிலமாக மாற வேண்டும் என்றால் வன்னியர் உள்ளிட்ட அனைந்து பின்தங்கிய சமுதாயங்களும் முன்னேறியாக வேண்டும் இவற்றை வலியுறுத்தவே இந்த மாநாடு

இந்த மாபெரும் மாநாட்டின் நோக்கம் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் அதனடிப்படையில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். அதேபோன்று அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக கல்வி வேலைவாய்ப்பு. உள்ளாட்சி ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் இடஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்க வேண்டும். கிரிமிலேயா முறை கூடாது: மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை ஒழிக்க வேண்டும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் மிகவும் பின்தங்கியிருக்கும் வடமாவட்டங்களின் முன்னேற்றத்திற்காக சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவையாகும். 

வரலாறு படைக்கவிருக்கும் இந்த மாநாட்டில் நமது சொந்தங்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பிக்குமாறு பாசத்துடன் அழைக்கிறேன் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.