பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, அருள்மிகு பங்காரு அடிகளாரின் மறைந்த செய்தி கேட்டவுடன் அதிர்ச்சியில் இருந்து மீறவில்லை, என்னைப்போன்ற கோடிக்கணக்கான மக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இதுமனித குலத்திற்கு ஒரு பேரிழப்பாக கருதுகிறேன். ஆன்மீகத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆதிக்கத்தை செலுத்தும் காலத்தில், பாட்டாளி குடும்பத்தில் பிறந்து ஆன்மீகத்தில் ஈடுபட்டார். உலகளவில் புகழ்பெற்று உலகத் தலைவர்கள் எல்லாம் ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர், ஆளுநர்கள், பெருந்தலைவர்கள் என அனைவரும் சந்தித்து அருளையும், ஆசீர்வாதத்தையும் பெறுகின்ற செய்திகள் எல்லாம் பார்த்து தமிழனாக பெருமைப்பட்டு கொண்டிருக்கிறோம். ஆன்மீகத்தில் மிகப்பெரிய புரட்சியை செய்தவர் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.



குறிப்பாக, கருவறைக்குள் பெண்கள், சாதாரண மக்கள் சென்று, பூஜைகள் எல்லாம் செய்கின்ற புரட்சியை செய்தவர். எனக்கு எட்டு வயது முதல் இருந்தே அவரை நன்றாக தெரியும் கடந்த மாதம் கூட தனது குடும்பத்துடன் சென்று அவரை சந்தித்து ஆசீர்வாதத்தை பெற்றதாக கூறினர். அவரும் வாழ்த்தி அனுப்பினர். மேலும் பங்காரு அடிகளார் ஆன்மீகவாதி மட்டுமல்ல, கல்வியாளர், கல்வி நிலையங்கள், கல்வி மையங்களை நிறுவி, ஏழை மக்களுக்கு கல்வி கொடுத்தவர். கிராமம் தோறும் மன்றங்களை துவங்கி பெண்களை தலைவராக்கி அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், தொண்டர்கள், பக்தர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் புகழ் எப்பொழுதும் மறையாது என்றும் மறையாது. அவரை எப்பொழுதும் வழிபட்டு கொண்டிருப்போம் என்றும் கூறினார். குறிப்பாக 2019 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றவர். அவருக்கு அரசு மரியாதை நிச்சயம் செலுத்தவேண்டும் என்றும் இதனை சாதாரணமாக பார்க்கிறேன் கூறினார். கோடிக்கணக்கான தொண்டர்கள், பக்தர்களை வைத்திருப்பவர். அவரை பிரிந்துவாடும் அனைத்து பக்தர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அது மட்டுமில்லாமல் காலம் காலமாக அவருடைய புகழ் எப்பொழுதும் மறையாது தொடர்ந்து மலர்ந்து கொண்டுதான் இருக்கும் எனவும் தெரிவித்தார்.