சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி கட்டமைப்பு பணிகளுக்கான திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டினார். அதன்பின்னர் அவர் உரையாற்றினார். அதில், “தமிழ்நாட்டிற்கு எப்போதும் வருவது மிகவும் சிறப்பான ஒன்று. இதை பாரதியார் சிறப்பாக கூறியிருப்பார். அதாவது செந்தமிழ் நாடு என்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதுனிலே என்று அழகாக கூறியிருப்பார்.


ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாராவது ஒருவர் தலைசிறந்த நபராக விளங்குகின்றனர். அண்மையில் இந்திய காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டிக்கான அணிக்கு நான் வரவேற்பு அளித்தேன். அதில் இந்தியா வென்ற 16 பதக்கங்களில் 6 பதக்கங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் முக்கியமானவர்களாக இருந்தனர். தமிழ் கலாச்சாரம் உலகளாவியது. கன்னடா முதல் மலேசியா வரை, சென்னை முதல் கனடா வரை, மதுரை மலேசியா வரை, சேலம் முதல் தென்னாப்பிரிக்கா வரை பரவியது.


பிரான்ஸ் நாட்டின் பாரீஸில் கேன்ஸ் விழாவில் தமிழ்நாட்டிற்கான பாரம்பரிய ஆடையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சிவப்பு கம்பளத்தில் நடந்தார். அது உலகளவில் தமிழ்நாட்டின் பாரம்பரியத்திற்கு சிறப்பானதாக அமைந்தது.  தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு 31ஆயிரம் ரூபாய்க்கு மேலான திட்டங்கள் இங்கு தொடங்கப்பட்டன. நான் இங்கு சில முக்கியமான விஷயங்களை நான் குறிப்பிட விரும்புகிறேன். சாலை கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


 






பிரதமரின் வீடு வசதி திட்டம் மூலம் சென்னை கலங்கரை விளக்கம் விட்டு வசதி பிரிவு மூலம் வீடு கிடைக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்தத் திட்டம் மிகவும் முக்கியமான திட்டம். இது சூழலியலுக்கு இசைவான ஒரு திட்டம். சென்னை துறைமுகத்தை பொருளாதார வளர்ச்சியின் மையமாக ஆக்கும் அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது.


இந்தத் திட்டங்கள் அனைத்தும் பல வேலைவாய்ப்பு மற்றும் சுயசார்ப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தமிழ் மொழியை பிரபலப்படுத்த முழு அர்ப்பணிப்புடன் மத்திய அரசு உள்ளது. இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும். ” எனத் தெரிவித்துள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண